வெவ்வேறு இடங்களிலான விபத்துக்களில் சிக்கி 3 யானைகள் பலி.! (காணொளி)
ஹபரண மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஹபரண – கந்தளாய் பிரதான வீதியின் இரு பகுதிகளில் வாகனங்களில் மோதுண்டு யானையொன்று உயிரி ழந்துள்ளதுடன் மற்றுமொரு யானை காயமடைந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய ஒரு வாக னம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட துடன், வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
காட்டு யானை யை விபத்திற்குள்ளாக்கி விட்டு தலைமறைவாகிய மற்றுமொரு வாகனத்தின் சாரதியைக் கைது செய்வதற் கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை – கொன்னருவ மல்லார விவசாயக் காணி யொன்றிலிருந்து யானையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யானையின் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் கண்டறி வதற்கு சம்பவ இடத்திற்கு குழுவொன்றை அனுப்பியுள்ளதாக, ஹம்பாந் தோட்டை வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தம்புள்ளை பகுதியில் வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் வெடிபொருளை உட்கொண்டதில் யானையொன்று உயிரிழந்துள்ளது.