திருகோணமலையில் குரலற்ற மக்களைத் தேடிய பயணம். (காணொளி)
திருகோணமலை பல்வேறு சிறப்புக்களால் புகழ்பூத்த மாவட்டமாகத் திகழ் கின்றது.
எனினும், இங்கு வாழும் ஒரு சாரார் நாளாந்தம் பெரும் போராட்டத் திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா்.
குரலற்றவர்களாக இருக்கும் அம் மக்களைத் தேடி இன்று இரண்டாவது நாளா கவும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் பயணித்துள்ள னா்.
மக்கள் சக்தி குழுவினர் திருகோண மலை – குச்சவௌி, திரியாய் கிராமத்திற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் மக்கள் ஒன்று கூடியிருப்பதை அவதானித்துள்ளனர்.
அங்கு சென்று வினவியபோது காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண்ணொ ருவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
75 வயதான நல்லையா வள்ளியம்மை என்ற வயோதிபப் பெண் இன்று அதி காலை 5.00 மணியளவில் அவரின் வீட்டின் பின்புறம் யானை தாக்கி உயி ரிழந்துள்ளார்.
யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த திரியாய் பகுதி மக்கள், 2002 ஆம் ஆண்டு மீளக்குடியேறினர். தாம் மீளக்குடியேறிய நாளில் இருந்து யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக இங்குள்ள மக்கள் தெரி வித்துள்ளனர்.
இதுவரையில் யானை தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காய மடைந்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
யானை வேலி அமைக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான மின்சாரம் வழங்கப் படவில்லை என மக்கள் சக்தி குழுவினரிடம் கிராம மக்கள் தெரிவித்துள்ள னா்.
மற்றுமொரு குழுவினர் திருகோணமலை மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதிக்கு சென்று, மக்களின் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
நொச்சிக்குளம் கிராம மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு மீளக்குடியேறியுள்ளனர். சுமார் 86 குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்திற்கான வீட்டுத்திட்டம் இதுவரையில் வழங்கப்படவில்லை.
மக்கள் வீடுகள் இல்லாமல் தற்காலிக தகரக்கொட்டகைகளிலே வாழ்ந்து வரு கின்றனர். மாத்தறை – தியகஹ கிராம மக்கள், அரசாங்கத்தின் திட்டமொன் றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரை அதிகளவில் உறிஞ்சும் அகேஷியா மற்றும் பைனஸ் மரங்கள் அரசாங் கத்தினால் கிராமம் முழுவதும் நடப்பட்டுள்ளன. இதனால் தியகஹ கிராமத் தின் நீர் நிலைகள் வற்றிப்போயுள்ளதுடன், தற்போது மண் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிராம மக்களுக்கு குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது.
மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர், மொரவக்க – மொரக்கந்த கிரா மத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில், பகுதியளவில் காணப்படும் பல வீடுகளை அவதானித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் 25 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அதனை இந்த மக்கள் நிராகரித்துள்ளனர்.
அந்த நிதியில் வீடு, காணியை கொள்வனவு செய்ய முடியாமையே இதற்கு காரணமாகும்.