ஐ.தே.க.வின் நகர்வுகள் விடயத்தில் மைத்திரி – மஹிந்த தீர்வுகாண வேண்டுமென- சு.க.
பரந்துபட்ட கூட்டணியை அமைக்காது வேட்பாளரை தெரிவு செய்வதென்பது சாத்தியமற்ற விடயமாகும்.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலை வர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்கள் விரைவில் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வர வேண்டும் என சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நகர்வுகள் முக்கியமானவையாகு் எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறுகையில், நிலையான கொள்கையுடைய அரசாங்கத்தை நோக்கி நகர வேண்டும். தனி நபர்கள் மற்றும் அரசியல் கட்சிகளினால் நாட்டின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.
எனவே நாட்டிற்கு நிலையான கொள்கை ஒன்று அத்தியவசியமாகின்றது. மாறாத கொள்கையை நோக்கிய அரசியல் பயணத்தை நாட்டில் ஏற்படுத்தும் நோக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயற்படும்.
இல்லையென்றால் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் நாடு பாதாளத்திலேயே இருக்கும். கட்சி பேதங்களை மறந்து நபர்களுக்கு முக்கியத்தும் கொடுக்காது அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்பதே சுதந்திர கட்சியின் நிலைப்பாடாகும்.
மத்திய செயற்குழுவிலும் நிலையான கொள்கை திட்டம் குறித்து பேசப்பட உள்ளது. அதற்கமைவாகவே எதிர்கால செயற்பாடுகள் காணப்படும். அதே போன்று எதிர்கால தேர்தல்களை மையப்படுத்தி கூட்டணிகள் அமைக்கப்படும் பட்சத்தில் இந்த கொள்கை திட்டத்துடன் இணக்கபாட்டை ஏற்றுக்கொள் வோம்.
வலுவான கூட்டணியொன்று அமைக்காது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பேசுவதில் பலனில்லை. 1994 பொடி ஹப்புவாமியின் கட்சியுடன் தான் முதற் தடவையாக சுதந்திர கட்சி கூட்டணி அமைத்தது.
அன்று முதல் இன்று வரை சுதந்திர கட்சி பல கட்சிகளை இணைத்து கூட்டணியாகவே தேர்தல்களில் போட்டியிடுகின்றது. கூட்டணி அமைக்க முன்னர் வேட்பாளரை எந்வொரு சந்தர்ப்பத்திலும் தெரிவு செய்யப்படவில்லை.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தினேஷ் குனவர்தண போன்ற கட்சி தலைவர்களுடன் ஒன்றிணைந்து கலந்துரையாடி எவ்வாறு வலுவான கூட்டணியை உருவாக்குவது என்பதை தீர்மானிக்க வேண்டும்.
அதன் பின்னரே வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும். இதற்கு அப்பால் சென்று செயற்பட முடியாது. எனவே தலைவரை அறிவிக்க அவசரப்பட தேவையில்லை. ஒற்றுமையுடன் முதலில் கூட்டணியை உருவாக்குவோம்.
ஐக்கிய தேசிய கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை மாறாக எதிர் வரும் 5 ஆம் திகதி கூட்டணியை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இவ் வாறே செயற்பட வேண்டும். ஜனாதிபதி சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் விரைவில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பார் என நம்புகின்றேன் என்றார்.