Breaking News

தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதாக - வரதராஜப் பெருமாள்

தமிழ் மக்களை சிங்களத் தலைவர் கள் ஏமாற்றியது போலவே இன்றை க்கு தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக் களை ஏமாற்றி வருகின்றனர் எனக் குற்றஞ் சாட்டியிருக்கும் வடக்கு கிழ க்கு மாகாண முன்னாள் முதலமைச் சர் வரத ராஐப் பெருமாள் தமிழ் மக் களிற்கு நம்பிக்கையளித்து வாக்குக ளைப் பெற்று தமிழ் மக்களின் தலை வர்களாக இருக்கின்ற கூட்டமைப்பி னரின் இந்த ஏமாற்றுத்தனங்களை தமிழ் மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

யாழிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் தான் இந்த அரசாங்கம் கொண்டுவரப்பட்டது மாத்திரமல்லாமல் இன்றைக்கு கூட்டமைப்பின் ஆதரவில் தான் இந்த அரசாங்கம் தப்பி பிழைத்து நிற்கிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து கூட்டமைப்பினர் முடிவுகளை எடுத்துச் செயற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த அர சாங்கம் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து செயற்படுவதற்கு கூட்டமைப்பினர் தவறி வருகின்றனர்.

 அவர்களைப் பொறுத்தவரையில் அடுத்த தேர்தல்களை இலக்கு வைத்து தமது பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே அனைத்துச் செயற்பாடு களையும் முன்னெடுக்கின்றனர்.

தீவிர தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்கு களைப் பெற்று பதவிகளுக்கு வந்தவர்கள் இன்றைக்கு பதவிகளுக்காக வும் பொக்கற்றுக்களை நிரப்புவதற்காகவுமே சௌற்படுகின்றனர்.

குறிப்பாக கடந்த நான்கு வருடத்தில் அரசியல் கைதிகள் விடுதலை, பொளத்த மயமாக்கல் போன்ற பலவற்றைச் செய்திருக்கலாம். இந்த விடயங்கள் தொடர் பில் அரசியல் தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதில் அக்கறை செலுத்தவில்லை.

இவ்வாறான நிலையில் தான் இன்றைக்கு பௌத்த மேலாதிக்க சிந்தனையால் நிலைமை மோசமாகியிருக்கின்றது. இந்த விடயங்களில் ஆட்சியில் இருக் கும் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது கூட்டமைப்போ நேரடியாக எந்தவித அக்கறையையும் செலுத்தவில்லை.

ஒரு சட்டத்தரணி என்ற வகையில் கின்னியா விவகாரத்தில் சுமந்திரன் செயற் பட்டிருக்கின்றதைப் பாராட்டுகின்ற அதே வேளையில் தமிழ் மக்கள் பிரதி நிதிகள் என்ற வகையில் சுமந்திரன் உட்பட கூட்டமைப்பினர் அனை வரும் என்ற செய்தனர் அல்லது செய்த கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வி எழுகின் றது.

இந்த கன்னியா விவகாரம் கூட நிதுpமன்ற விவகாரம் அல்ல. அது உண்மை யில் அரசயில் விவகாரம் தான். ஆகவே அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமானது.

இது போலவே அரசியல் தீரவு விடயத்திலும் கடந்த 2015 ஆம் ஆண்ட முதல் பல தடவைகள் தீர:வு வருகிறது வருகிறது என்று கூறிய பொதும் தீர்வு இன்னமும் வரவில்லை. அனால் யாழ் வந்த பிரதமர் இன்னும் மூன்று வரு டங்களில் தீர்வு என்று கூறியிருக்கின்றார்.

கடந்த காலங்களில் சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்திருந்தார். ஆனால் இன்றைக்கு தமிழ்த் தலைவர்கள் அதே சிங் களத் தலைவர்களுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்.

உண்மையச் சொல்லப் போனால் தமிழ் மக்கனள் நம்பி வாக்களித்து பாரா ளுமன்றம் அனுப்பிய பிரதிநிதிகிள் தமிழர்களை மிக மோசமாக இன்றைக்கு ஏமாற்றி வருகின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரையில் இருக்கின்ற தமது பதவிகளை பாதுகாப்பது டன் எதிர்காலத்தில் தமது பதவிகளைப் பெற்றுக் கொள்வதிலும் தமது பொக் கற்றுக்களை நிரப்புவதற்குமான அரசியலையே தற்போது நடாத்தி வருகின் றனர்.

தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை தமிழ்த் தலைவர்களே ஏமாற்றுகின்ற நிலைமை மாற வேண்டும். தமிழ் மக்கள் நம்பி வாக்களித் கூட்டமைப்பினர் இல்லாமல் போனாலே இனி தமிழ் மக்களுக்கு நல்லது நடக்கும். ஆகவே மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரையில் அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருப் பார்கள்.

அவ்வாறான தலைவர்களை தொடர்ந்தும் தமிழ் மக்கள் தெரிவு செய்தால் தமிழ் மக்களே ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு தமிழ் மக்கள் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.