அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவர் இராஜினாமா
அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவர் கிம் டரொச் (Kim Darroch) இராஜி னாமாச் செய்துள்ளார்.
தன்னுடைய பதவிக்காலம் இவ் வருட இறுதி வரை இருந்தாலும் தற் போதைய தருணத்தில் புதிய தூது வரை நியமிப்பதற்கு அனுமதிப்பதே சிறந்தது என, வெளிவிவகார அலு வலகத்திற்கு அனுப்பியுள்ள கடித த்தில் கிம் விவரித்துள்ளாா்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கடுமையாக விமர்சித்திருந்த மின்னஞ்சல்கள் கசிந்த விவகாரத்தைத் தொடர்ந்தே கிம் பதவி விலகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் ஆட்சி குழப்பம் மிக்கது எனவும் திறமையற்றது எனவும் குறித்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பிரித்தானிய தூதுவர் கிம் டரொச்சை அறிவில்லாதவர் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.