”விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது“: கஜேந்திரகுமார் பிரத்தியேக செவ்வி
"ஈ.பி.ஆர்.எல்.எப்.தங்களின் சுயரூபத்தை மாற்றவில்லை"
ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதி யரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

கேள்வி:- தமிழ் மக்களுக்கு மாற்றுத்தலைமையொன்று அவசியம் என்பதில் உறுதியாக இருக்கின்றீர்களா?
பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்னணியே மாற்றுத்தலைமை என்ற சொற்பதத்தினை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது. எமது முன்னணி மட்டும் தான், போர் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறான பயணத்தையும், அணுகுமுறைகளையும் அந்தந்தக் காலங்களில் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வருவதோடு கொள்கை ரீதியான மாற்றுத்தலைமையொன்றின் அவசியத்தினையும் எடுத்துரைத்து வருகின்றது.
அந்தவகையில் தமிழ் மக்களுக்கான மாற்றுத்தலைமை உண்மையானதாக இருக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். கொள்கையிலிருந்து விலகிச் சென்றுள்ள கூட்டமைப்புக்கு மாற்றாக கூட்டமைப்பு போன்றே பிறிதொரு அணியை ஒருவர் தலைமையில் உருவாக்கி தேர்தலில் கூட்டமைப்பினை தோற்கடித்து மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டு மட்டுமே வெற்றிபெற வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவதால் எவ்விதமான பயனுமில்லை.
ஆகவே கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் அவர்களை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டுமாயின் கூட்டமைப்பின் கொள்கைகளை கைவிட்டு தமிழ்த் தேசிய கொள்கைகளை நேர்மையான முறையில் பின்பற்றும் இதய சுத்தியான தரப்புக்களுடன் இணைந்து தான் மாற்றுத்தலைமையொன்றை உருவாக்க முடியும்.
அதற்கு நாம் என்றுமே தயாராக இருக்கின்றோம். கூட்டமைப்பின் முகமூடியை நீக்கி பிறிதொரு அணிக்கு அந்த முகமூடியை பொருத்துவதற்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்புக்களை வழங்க முடியாது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம்.
கேள்வி:- விக்னேஸ்வரனை மாற்றுத்தலைமையாக ஏற்றுக்கொள்கின்றோம் என்ற நிலைப்பாட்டில் தற்போதும் இருக்கின்றீர்களா?
பதில்:- தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினரும் இணைய வேண்டும் என்று தான் விரும்புகின்றார்கள். தாயகத்தின் பல்வேறு இடங்களில் நாம் மக்களைச் சந்தித்த தருணங்களில் இந்த ஒற்றுமையையே விரும்புகின்றார்கள் என்பதை எம்மிடத்தில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
வேறு தரப்புக்கள் குறித்து அவர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்று எமக்கு யாரும் கூறவில்லை. மக்களின் இந்த விருப்பிற்காக இதயசுத்தியுடன் செயற்படுவதற்கு நாம் தயார் என்று 2015ஆம் ஆண்டிலிருந்தே பகிரங்கமாக கூறிவருகின்றோம்.
தற்போதும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றோம். ஆனாலும், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் பங்கேற்பு இல்லாத ஒரு கூட்டணியை ஏற்படுத்த முடியாது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் நிபந்தனை விதித்து மக்கள் விரும்பும் நேர்மையான கூட்டு ஏற்படுவதை குழப்புகின்றார். ஆகவே விக்னேஸ்வரனும் மற்றொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே உருவாக்குகின்றார்.
கேள்வி:- ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்து சி.வி.தலைமையில் ஐங்கரநேசன், அனந்தி சசிதரன் போன்ற தரப்புக்களை உள்வாங்கிய கூட்டில் இணையத்தயாராக இருக்கின்றீர்களா?
பதில்:- ஐங்கரநேசன், அனந்தி, போன்றவர்கள் எல்லாம் விக்னேஸ்வரனின் பங்காளிகளாக இருப்பார்கள். அவர் தலைமையிலான அணிக்கும் எமக்கும் இடையில் தான் கூட்டணி அமையும். மாறாக நாங்கள் நேரடியாக விக்கினேஸ்வரன் தவிர்ந்த தரப்புக்களுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை. இந்த அடிப்படையில் தான் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதற்கு நாங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கவில்லை. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப்பையும் தன்னுடன் உள்வாங்குவதற்கே நாம் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம்.
கேள்வி:- கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியேறியபோதும் அதன் பின்னரான காலத்திலும் உங்களுக்கும் அத்தரப்புக்கும் இடையில் நல்லுறவு நீடித்திருந்ததல்லவா?
பதில்:- 2010ஆம் ஆண்டிலிருந்து நாம் கூட்டமைப்பின் போக்கினை அம்பலப்படுத்தி வருகின்றோம். அதன் பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்பும் கூட்டமைப்பின் போக்கினை புரிந்துகொண்டு பகிரங்க விமர்சனங்களுடன் வெளியேறியிருந்தது.
அது வரையில் அவர்களின் போக்கும் செயற்பாடுகளும் சரியாகவே இருந்தன. அப்போது அவர்களுடன் இணைந்து பயணிப்பதிலோ செயற்படுவதிலோ எமக்கு தயக்கங்கள் காணப்பட்டிருக்கவில்லை.
ஆனால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூட்டமைப்பிலிருந்து முதன்முதலாக வெளியேற்றப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்து விலகியிருந்த ஈரோஸ் உள்ளிட்ட தரப்புக்களுடன் இணைந்து கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
இந்த செயற்பாடு கொள்கையின் மீதான அவர்களின் பிடிப்பினை வெளிப்படுத்தியது. அது மட்டுமன்றி, உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர், கூட்டமைப்பு சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதற்காக எவ்வாறு ஐ.தே.க, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி போன்றவற்றுடன் இணைந்து செயற்பட்டதோ அதேபோன்று ஈ.பி.ஆர்.எல்.எப்பும் வவுனியா நகரசபையில் செயற்பட்டது.
மேலும் வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஈ.பி.ஆர்.எல்.எப், மஹிந்த அணியுடன் கூட்டிணைந்து தவிசாளர் பதவிக்காக போட்டியிட்டு கூட்டமைப்பினை விடவும் ஒருபடி மேலே சென்று செயற்பட்டிருந்தது.
இதன்மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் தங்களின் சுயரூபத்தினை எந்தவொரு இடத்திலும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.
கேள்வி:- இந்தியாவின் முகவர்களாக ஈ.பி.ஆர்.எல்.எப் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டினை எந்த அடிப்படையில் முன்வைக்கின்றீர்கள்?
பதில்:- 2017 நவம்பர் 12ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ தரப்புக்களின் பங்கேற்புடன் உள்ளூராட்சி தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பதென்று பேசப்பட்டது. அதன்போது ஈ.பி.ஆர்.எல்.எப் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கூறவும் ஈற்றில் அச்சின்னத்தில் தேர்தலுக்குச் செல்வதில்லை என்றும் பொதுச் சின்னம் மற்றும் பெயரில் களமிறங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்பின்னர் கூட்டணிக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தேர்தல்கள் திணைக்களத்திற்குச் சென்று ஆலோசனைகளை பெற்று நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தோம். அத்தருணத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டார்.
அவர் புதுடெல்லிக்கு செல்வதை எம்மிடத்திலும் கூறியிருந்தார். புதுடெல்லியிலிருந்து திரும்பியதும் அவர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவதாக உறுதியாக அறிவித்தார். நாங்களும் வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றோம். ஆனால் எமது அடிப்படை கொள்கைகள், நிலைப்பாடுகள் அதன் பின்னர் மாறியதாக இல்லை.
1980களிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் ஆகியவற்றை இந்தியா தமது முகவர்களாக பயன்படுத்தியது என்பதை அனைவரும் அறிவார்கள். அந்த வகையில் நாம் புதிய விடயமொன்றை கூறவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப் உட்பட எந்தத் தரப்பும் இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதில் எமக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை.
ஆனால் தமிழ் மக்களின் நலன்களை விடவும் இந்தியாவின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து முகவர்களாக செயற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி:- பிராந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தவல்ல இந்தியாவை புறந்தள்ளி தமிழர் பிரச்சினையை அணுக முடியும் எனக் கருதுகின்றீர்களா?
பதில்:- நாங்கள் இந்தியாவை எதிரியாக பார்க்கும் தரப்பு அல்ல மாறாக இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதற்கு விரும்பும் தரப்பாகவே இருக்கின்றோம். இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் திட்டமிட்ட வகை யில் நாங்கள் செயற்படபோவதில்லை.
ஆனால், தமிழ் மக்களின் நலன்களுக்கும், தமிழ்த் தேசத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை. தமிழ்த் தேசத்தின் நலன்களும், இந்தியாவின் நலன்களும் ஒருபுள்ளியில் சந்திப்பதற்காக செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோமே தவிர, இந்தியாவின் நலன்களுக்காக தமிழ்த் தேசத்தின் நலன்களை கிடப்பில் போடுவதற்கு நாம் தயாரில்லை.
கேள்வி:- கூட்டமைப்பை விட்டு வெளியேறிய பின்னர் உங்களுக்கும் இந்தியத் தரப்புகளுக்கும் இடையிலான உறவுகள் எப்படியிருக்கின்றன?
பதில்:- இந்திய இராஜதந்திர தரப்புகள் எம்முடன் சந்திப்புகளை நடத்தியிருக்கின்றன. குறிப்பாக, யாழில் துணைத்தூதுவராக நடராஜன் இருந்த காலத்தில் பல சந்திப்புக்களை நடத்தியிருக்கின்றோம். அவருடைய காலத்தின் பின்னர் அவர்களுக்கும் எமக்கும் எவ்விதமான தொடர்புகளும் இருக்கவில்லை.
எம்மைப் பொறுத்தவரையில் அவர்களுடன் எமக்கு தொடர்பினை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. காரணம், இந்தியாவின் நலன்களை நாம் அறி வோம். அவர்களின் நலன்களுக்கு எதிராக நாம் திட்டமிட்டு செயற்படவில்லை. எமது மக்களின் விடயங்களையே நாம் முன்னிலைப்படுத்துமாறு கோருகின்றோம். இதனையும் அவர்கள் புரிந்திருப்பார்கள் என்றே கருதுகின் றோம்.
கேள்வி:- தமிழர்கள் விடயத்தில் இந்தியா தனது நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்டிருக்கின்றமையை அனுபவரீதியாக கண்டிருக்கின்றமை யால் தான் இந்திய விடயத்தில் தாங்கள் இறுக்கமான பிடிமானத்தினைக் கொண்டிருக்கின்றீர்களா?
பதில்:- இந்தியா தனது நலனுக்காக, இந்திய- – இலங்கை ஒப்பந்தத்தினை உயிரோடு வைத்திருக்க வேண்டும் என்றவொரு காரணத்திற்காக ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ் மக்களை வற்புறுத்துகின்றது.
ஒற்றையாட்சிக்குள் இருக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான தீர்வின் ஆரம்பப் புள்ளியாக கூட பார்க்க முடியாது. அப்படியிருக்கையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலிந்து நிற்பது தமிழ் மக்களினதும், தேசத்தினதும் நலன்களை முற்றுமுழுதாக உதாசீனம் செய்யும் செயலாகும்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் என்று இந்தியா பலதடவைகள் கூறியிருக்கின்றது. 2009ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்தவுடன் இலங்கைக்கு வந்த இந்திய இராஜதந்திரிகள் ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்புக்கு கட்டளை பிறப்பித்தார்கள்.
கூட்டமைப்பின் தலைமையும் ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தத்தினை ஏற்றுக்கொண்டு செயற்படும் தீர்மானத்தினை எடுத்தது. இதனால் தான் எமக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் கொள்கை ரீதியான முரண்பாடு ஏற்பட்டது. இதனால் தான் நாம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினோம்.
இந்நிலையில் கடந்த ஜெனீவா கூட்டத்தொடரிலும் இந்தியத் தூதுவரும் 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுலாக்கி தமிழர்களுக்கு தீர்வளிக் கும்படி குறித்துரைத்திருந்தார். இதன் மூலம் இந்தியா தற்போதும் அதே நிலைப்பாட்டுடன் தான் இருக்கின்றது என்பது தெளிவாகின்றது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டினை தமிழ் மக்களின் அரசியல் தரப்பாக செயற்படும் நாம் மாற்றியமைக்க வேண்டும் என்று தான் செயற்பட வேண்டும். அதனைவிடுத்து, இந்தியா பிராந்திய வல்லரசு என்பதால் அதனை பகைத்து விடக்கூடாது என்ற அடிப்படையில் அவர்களின் நலன்களுக்காக தமிழ் மக்களின் நலன்களை மறுக்கும் 13 ஆவது திருத்தத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி:- கொள்கையிலிருந்து விலகிப்பயணிப்பதாக கூட்டமைப்பை கடுமையாக விமர்சிக்கும் நீங்கள் அதற்கு மாற்றாக பலமான கூட்டணியொன்று அமைவதற்கான சூழமைவுகள் ஏற்பட்டுள்ள தற்போதைய சந்தர்ப்பம் உங்களின் கடுமையான நிலைப்பாட்டால் நழுவ விடப்படுகின்றதல்லவா?
பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழினத்திற்கு துரோகமிழைக்கப்போகின்றது என்பதை 2010ஆம் ஆண்டு நாம் கூறியபோது யாரும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. ஆனால் நாம் தீர்க்கதரிசனமாக கூறிய விடயமே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
அதேபோன்று தான் கூட்டமைப்பினை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கூட்டமைப்பினை விடவும் மோசமான கொள்கைகளைக் கொண்டதும் கூட்டமைப்பின் தவறுகளையே செய்துகொண்டிருக்கும் தரப்புகளை ஒருங்கிணைத்துக் கொண்டு உருவாகும் கூட்டு கொள்கை பற்றுறுதியான அணியை உருவாக்கப்போவதில்லை.
அத்தகையதொரு கூட்டு உருவாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றமையால் தான் இறுக்கமான நிலைப்பாட்டில் உள்ளோம். மேலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாற்று அணியை குழப்புகின்றார்கள் என்ற வகையில் முடிவுகளை எந்தவொரு இடத்திலும் எடுக்க மாட்டார்கள்.
காரணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் விக்னேஸ்வரனும் இணையவேண்டும் என்றே தமிழ் மக்கள் விரும்புகின்றார்களே தவிர, கொள்கைகளை கைவிட்டு தமிழ்த் தேசிய நீக்கத்திற்கும், காட்டிகொடுப்புகளுக்கும் காரணமாக இருக்கும் தரப்புக்கள் அனைத்தையும் இணைத்து கூட்டமைப்பினை தோற்கடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை.
கேள்வி:- விக்னேஸ்வரனையும் இந்தியா பின்னணியில் நின்று இயக்கு வதாக எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்?
பதில்:- கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி நீதியரசர் விக்னேஸ்வரனே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்படுவதை இந்தியா விரும்ப வில்லை என்று எம்மிடத்தில் கூறியிருந்தார். அதனையே நாம் வெளிப்படுத்தி யிருக்கின்றோம்.
கேள்வி:- விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணிக்குள் சென்றால் தமி ழர் அரசியலில் தலைமைத்துவம் அளிப்பதற்கு உங்களுக்கான சந்தர்ப்பங்கள் குறைவாக உள்ளமையால் பல்வேறு காரணங்களை முன் வைப்பதாக கூறப்படும் விமர்சனங்களை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- நீதியரசர் விக்னேஸ்வரன் எனக்கு அனுப்பிய கடிதத்தில், எமது கட்சி யின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தயார் என்றும் தற்போது உரு வாகப்போகும் கூட்டில் அவருக்கு பின்னர் நானே தலைமை வகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரனையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என் றும் கோரியுள்ளார். நான் தலைமையை வகிக்க வேண்டுமென்றோ அல்லது எமது கட்சியை முன்னிலைப்படுத்த வேண்டுமென்றோ விரும்பியிருந்தால் நாம் அந்த எழுத்து மூலமான ஆவணத்தை ஏற்றுக்கொண்டு இணைந் திருப் போம் அல்லவா? எமக்கு பதவிகள், அடையாளங்கள் முக்கியமில்லை. மக்க ளுக்காக நேர்மையான கொள்கையே அவசியம்.
கேள்வி:- கொள்கை ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்த தேர்தல்களை தனித்து நின்று முகங்கொடுப்பீர்களா?
பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது அதனை விட மோசமான கொள்கைகளைக் கொண்ட கூட்டணிகளுடனோ நாம் ஒருபோதும் இணையப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கொள்கையில் பற்றுறுதியாக இருக்கும் தரப்பு களுடன் கைகோர்ப்பதற்கு தயாராகவே உள்ளோம்.