அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் 10, 11 ஆம் திகதிகளில்..
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர் வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலை வர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை யில் இன்று காலை கட்சித் தலைவர் களின் கூட்டம் நடைபெற்றது.
இதன் போது இந்த வாரம் பாராளு மன்றத் தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவ டிக்கைகள் குறித்து கலந்துரையாடி இத் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், காணி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம் தொடர்பில் எதிர்வரும் வௌ் ளிக் கிழமை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.