அரையிறுதிக்கு தகுதிபெற்றது இந்தியா
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பங்களாதேஷுக்கு எதிரான நேற் றைய போட்டியில் 28 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் இந்தியா வுக்கு இந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது.
பேர்மிங் ஹோமில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத் தாடிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து சவாலான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தது.
ரோஹித் சர்மா ஒருநாள் அரங்கில் 26ஆவது சதத்தை எட்டிய நிலையில் 104 ஓட்டங்களை பெற்றார். இது இவ்வருட உலகக்கிண்ணத்தில் ரோஹித் சர்மா பதிவு செய்யும் நான்காவது சதமாகும்.
முன்னாள் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு பிறகு ஒரு உலகக்கிண் ணத்தில் 500 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பையும் இதன்போது ரோஹித் சர்மா பெற்றார். லோகேஷ் ராகுல் 77 ஓட்டங்களையும் அணித்தலைவர் விராட் கோஹ்லி 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
ரிஷப் பாண்ட் 48 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பின்வரிசையில் மஹேந்திர சிங் தோனி 35 ஓட்டங்களை பெற்றார். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ஓட்டங்களை பெற்றது. முஸ்டபிஷூர் ரஹ்மான் 5 விக் கெட்களை வீழ்த்தினார்.
வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி 74 ஓட்டங்களுக்கு முதல் இரண்டு விக்கெட்களையும் இழந்தது. சௌமியா சர்க்கார் 33 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சகீல் அல் ஹசன் 66 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
சகீல் அல் ஹசனின் ஆட்டமிழப்பை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதோடு, இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. மொஹமட் சய்புதீன் மற்றும் சபீர் ரஹ்மான் ஜோடி ஏழாவது விக்கெட்டில் 66 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றி மீதான நம்பிக்கையை உருவாக்கியது.
சபீர் ரஹ்மான் 36 ஓட்டங்களுடன் போல்டானதோடு, மொஹமட் சய்புதின் 38 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்று வெற்றிக்காக போராடினார். எனினும், பின்வரிசையில் விக்கெட்கள் வீழ்த்தப்பட, பங்களாதேஷ் அணி 48 ஓவர்களில் 286 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
ஜெஸ்ப்ரீட் பும்ரா 4 விக்கெட்களையும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட் களையும் வீழ்த்தினர். போட்டியில் 28 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஏழாவது தடவையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இதேவேளை, இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் 50 ஓவர்களை வீசி முடிக்க தவறியுள்ளமையே இத் தடைக்கான காரணமாகும்.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் 50 ஓவர்களில் கடைசி இரண்டு ஓவர்களை வீசி முடிக்க அதிக நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்னவுக்கும் மேற் கிந் தியத்தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டருக்கும் போட்டிக்கட்டணத் தில் 40 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரு அணிகளின் வீரர்கள் அனைவருக்கும் 20 வீதம் அபராதத்தை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
திமுத் கருணாரத்ன வின் தலைமையில் இலங்கை அணியும் ஜேசன் ஹோல் டரின் தலைமையில் மேற்கிந்தியத்தீவுகளும் எஞ்சிய 12 மாதங்களில் இந்தத் தவறை மீண்டும் செய்யும் பட்சத்தில், அணித் தலைவர்களுக்கு போட்டித் தடை விதிக்கவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.