பிரித்தானிய பிரதமரை ட்ரம்ப் அவமதித்ததாகக் குற்றச்சாட்டு.!
பிரித்தானிய பிரதமரையும் பிரித்தானியாவையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவமதித்துள்ளதாக, பிரித்தானிய வெளிவிவகார செயலா ளர் ஜெரமி ஹன்ட் (Jeremy Hunt) குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதமர் தெரேசா மே பிரெக்ஸிட் விவ காரத்தை சரியாகக் கையாளவில்லை என, டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ் சாட் டியிருந்தார்.
அத்துடன், பிரித்தானியா வுக்கு புதிய பிரதமர் கிடைக்கவுள் ளமை பிரித்தானியாவுக்கு ஒரு நல்ல செய்தியெனத் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவர் கிம் டரச் ட்ரம்பின் நிர்வாகம் “திறமையற்ற ஒன்று” என விமர்சனம் செய்ததை அடுத்து அவர் குறித்தும் பிரித்தானிய பிரதமர் குறித்தும் ட்ரம்ப் இவ் வாறான கருத்துக்களைப் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.