அடுத்து வரும் மாதங்களில் திட்டமிடல் நடவடிக்கை.!
சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. இந்த நிலை தொடரமுடியாது. அடுத்து வரும் மாதங்களில் இதற்கெதிரான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள் ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.
ஆயுதமேந்தி போராடினால்தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக நீங்கள் ஆக்க பூர்வமாக கருமங்களை முன்னெடுப்பீர்கள் என்றால் மற்றும் ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டால் ஆயுதப் பலம் இல்லாவிட்டால் அதைக் கைவிடலாம் என நினைப்பீர்கள் என்றால் அடுத்துவரும்...
அது ஒரு தவறான நிலைப்பாடாகும் என்றும் ஆட்சித் தலைவர்கள், பெரும்பான்மையினத் தலைவர்கள் தாங்கள் விரும்புகின்ற சில கருமங்களை நிறைவேற்றுவதற்காக அரசியல் தீர்வு ஏற்படுவதையும் அதிகாரப் பகிர்வு ஏற்படு வதையும் தாமதிப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்று எங்களுக்கு ஒரு சந்தேகம் எழுகின்றது எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு நேற்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ் வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் உரையாற்றுகையில்
தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஒரு இலக்கை அடைவதற்காக தமிழ் மக்கள் இந்நாட்டில் இந்த நாட்டில உள்ளக சுய மரியாதையுடன் கௌரவமாக சுதந்திரமாக பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக ஆரம்பித்துள்ளாா்.
தந்தை செல்வா கட்சியை ஆரம்பித்து 70 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் பாதையில் நாங்கள் நீண்டதூரம் பயனித்திருக்கின்றோம். சில முக்கியமான மாற்றங்களை ஆட்சியிலே ஏற்படுத்தியிருக்கின்றோம். ஆனாலும் இன்னமும் ஒரு இறுதியான முடிவு மற்றும் உறுதியான முடிவு ஏற்படவில்லை.
உரிய நேரத்தில் உரிய காலத்தில் சந்தர்ப்பங்கள் வருகின்றபொழுது அதை முழுமையாக நாங்கள் பயன்படுத்தாவிட்டால் அதனுடைய விளைவுகள் சில சமயங்களில் பாரதூரமாக இருக்கலாம். எமது பிரச்சினையானது 47ஆம் ஆண்டிற்கு முன்பதாக இலகுவாகத் தீர்க்கப்பட்டிருக்கலாம்.
தந்தை செல்வா வைத்த கொள்கையின் அடிப்படையில் செய்திருக்கலாம். ஆனால் அவ்விதமான எண்ணப்பாட்டை இலங்கை ஆதரிக்கவில்லை. இந் நாட்டின் ஏனைய தலைவர்கள் விசேடமாக கண்டியத் தலைவர்கள் அதே கேள்வியை முன்வைத்தனர்.
இந்த நாட்டில் ஓர் சமஷ்டி ஆட்சி முறை ஏற்பட வேண்டும் என்று கேட்டனர். அதை நாங்கள் கேட்கவில்லை. யாழ்ப்பாணத்தின் இளைஞர் பேரவை இலங்கைக்கு பூரண சுதந்திரம் வேண்டும் எனக் கேட்டது. சமஸ்டி கேட்கவில்லை.
அதிகாரப் பகிர்வு கேட்கவில்லை, உள்ளக சுய நிர்னய உரிமை கேட்கவில்லை இருந்தபோதிலும் கூட இதற்காக நாங்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ வேண்டிய தேவையில்லை. இதன்பிரகாரம் நாங்கள் கனிசமான தூரம் முன்னேறியிருக்கின்றோம்.
இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் தலையீடு காரணமாக 1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் தலையீடு காரணமாக 13வது அரசியல் சாசனத் திட்டம் நிறைவேற்றப்பட்டு முதல் முறையாக ஓர் அதிகாரப் பகிர்வு ஆட்சிமுறை மத்தியில் ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் எங்களுக்கு ஓரளவிற்கு வடகிழக்கு இணைந்த சுயாட்சி கிடைத்தது. ஆனால் அது போதுமானதல்ல அது இன்னும் முன்னேற வேண் டும். அது உறுதியானதல்ல. அது நிறைவு பெற வேண்டும். உலகத்தின் பல்வேறு நாடுகளின் பல்வேறு ஆட்சி முறைகள் அதிகாரப் பகிர்வின் அடிப்படை யில் திகழ்ந்து வருகின்றன.
இவையெல்லாம் உதாரணங்கள். இவற்றை முன்னேற்றுவதற்காக 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா காலம் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கா காலம் மகிந்த ராஜபக்ச காலம் என்பனவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை.
அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்படவில்லை. அது நிறைவு பெற வேண்டும். இந்தப் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பிறகு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் பல கருமங்கள் முன்னெடுக்கப்பட்டு அதிலும் சில முன்னேற்றங்களைக் கண்டு அவை தற்போது மந்த கதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதனை நாங்கள் ஆதரிக்கப்போவதில்லை. எங்களுக்கு ஒரு சந்தேகம் எழுகின் றது. ஆட்சித் தலைவர்கள் பெரும்பான்மையினத் தலைவர்கள் தாங்கள் விரும்புகின்ற சில கருமங்களை நிறைவேற்றுவதற்காக அரசியல் தீர்வு ஏற்படுவதையும், அதிகாரப் பகிர்வு ஏற்படுவதையும் தாமதிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.
எமது பிரதேசங்களில் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் வடக்கு மாகாணத் தில் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கிருக்கின்ற சனத்தொகையின் விகிதாசாரத்தை மாற்றியமைக்கக்கூடிய வகையில் பல்வேறு வழிவகைகளில் பல கருமங்கள் இடம்பெற்று வருகின்றன.
காணிகள், காடுகள் சம்பந்தமாக வன இலாகா வனவிலங்குத் திணைக்களம்இ மகாவலி அதிகாரசபைபோன்றவை காணி அதிகாரங்களைப் பயன்படுத்தி அதன் மூலமாக குடிபெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியான நிலமையையும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலமையையும் ஏற்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எமது பாரம்பரிய நிலங்களில் குடியேறுகின்ற நிலையைக் காண்கின்றோம். இவ்விதமான பல நிகழ்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அதிகாரப் பகிர்வுகளை தமிழ் மக்களுக்கு வழங்காமல் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம்.
இது பாரதூரமான செயற்பாடு . இதனை அனுமதிக்க முடியாது. இதனை நாங் கள் அனுமதிக்க மாட்டோம். இதற்கு விரைவில் முடிவு காணுவோம். யுத்தம் நடைபெற்ற காலத்தில் தழிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவதற்கு முன்னதாக ஒவ்வொரு அரசாங்கத்தின் காலத்திலும் முன்னேற்றங்கள் ஏற்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு புதிய அரசாங்கத் தின் நிரலில் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவது என்று 2016 ஆம் ஆண்டிலே ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து. அதன் அடிப்படையில் பாராளுமன் றம் ஒரு அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு ஒரு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்பட்டு பல உப குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதில் பல முயற்சிகள் நடைபெற்றாலும் கூட இன்றைக்கு ஆயுதமேந்தியவர்கள் எங்களுடன் இணைந்து செயற்பட முடியாத நிலையில் அதனை இல்லாமற் செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆயுதமேந்தி போராடினால்தான் அரசியல் தீர்வு சம்மந்தமாக நீங்கள் ஆக்க பூர்வமாக கருமங்களை முன்னெடுப்பீர்கள் மற்றும் ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டால் ஆயுதப் பலம் இல்லாவிட்டால் அதைக் கைவிடலாம் என நினைப்பீர்கள் என்றால் அது ஒரு தவறான நிலைப்பாடாகும்.
அவ்விதமான ஒரு கருமத்தை நீங்கள் பின்பற்றுகின்றீர்கள் என்று சிந்திக்கத் தோன்றுகின்றது. அதையும் நாங்கள் பரிசீலிப்போம். யுத்தம் நடைபெற்றபொழுது அதற்கு அடுத்ததாக வந்த அரசாங்கங்கள் வாக்குறுதி கொடுத்தன. சர்வதேச சமூகத்திற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நாங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்போம் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது.
அவ்விதமான வாக்குறுதியின் அடிப்படையில் சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு உதவிகளை நல்கின. தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு உதவின. அவ்விதமான உதவிகள் அளித்ததன் காரணமாகத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாமலாக்கப்பட்டார்கள்.
இன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாமல் ஆக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்தின் வாக்குறுதி காற்றில் பறக்கின்றது. இதை நிறைவேற்றக்கூடியதாக எமக்குத் தெரியவில்லை ஆனாலும் இதனை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு உங்களுக்கு இருக்கின்றது.
நீண்ட காலமாக எமக்கிருந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமை மற்றும் நாங்கள் ஏமாற்றப்பட்டமையினால்தான் தழிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திப் போராடினர். ஏறத்தாழ 40 வருடங்களாக எமது மக்கள், எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தலில்லை. நாங்கள் சாத்வீக ரீதியாக போராடினோம்.
எமது தலைவர்கள் ஒப்பந்தம் செய்தார்கள்.. பேச்சுவார்த்தை நடாத்தினார்கள் ஒத்துழைப்பு நல்கினோம். அதற்கு மாறாக தமிழ் மக்கள் மீது அட்டூழியம் செய்தார்கள். அதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திப் செய்தார் கள்.
அதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இதன் காரணமாகத்தான் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் உதவிகள் கேட்டீர்கள். அவர்களும் உதவினார்கள் ஆனால் தற்போது அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடுகின்றமைபோல் தெரிகின்றது.
இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. இவைதான் எமக்குள்ள சவால்கள். எதிர் வரும் மாதங்களில் இந்தக் கருமங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் நாங் கள் திட்டங்களைத் தீட்டி செயற்படவேண்டிய நிலமை தற்போது ஏற்பட்டுள் ளது. எமது மக்கள் உறுதியாக உள்ளாா்கள்.
ஒருமித்து நிற்கிறார்கள். எமக்குப் பின்னால் நிற்கிறார்கள். ஆதரவு எமக்கு இருக்கின்றது. ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும். நாட்டில் அரசியல் குழப் பங்கள் ஏற்பட்ட நிலையில் எமது ஒற்றுமையின் மூலமாக நாட்டினுடைய ஆட்சிமுறையைக் கூட தீர்மானிக்கக்கூடியதாக இருந்தது. தெளிவான பாதை யில் சென்று எமது இலக்கை அடைய வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.