Breaking News

ஜனாதிபதி மைத்திரி தற்பொழுது சலனபுத்தியோடு செயற்படுவதாக - மாவை

-விடு­த­லைப்­பு­லிகள் கொள்­கைக்­காகப் போரா­டி­னார்கள் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­ சி­றி­சேன ஏப்ரல் 21தாக்­கு­த­லுக்­குப்­பின்னர் கூறினார். அதே ஜனா­தி­பதி தற்­போ­து­வி­டு­தலைப் புலிகள் போதை­வஸ்­துக்­கா­ரர்­க­ளுடன் தொடர்புபட்­டி­ருந்­த­தாக கூறு­வது அவர் சல­ன­புத்­தி­யோடு இருக்­கிறார் என்­ப­தையே எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

இது கண்­டிக்­கத்­தக்­கது என்று தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராசா தெரி­வித்தார். விடு­தலைப் புலிகள் தொடர்பில் ஜனா­தி­ பதி தெரி­வித்த கருத்து குறித்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

­மேலும் தெரி­விக்­கையில்,

நம்பி வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு அர­சியல் தவ­று­களை இழைத்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன துரோகம் செய்து வரு­கின் றார் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் போதைப் பொருள் வியா­பாரம் நடத்தி இன­வி­டு­தலைப் போராட்டம் நடத்­தி­னார்கள் என்று ஐனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்­டதை நாங்கள் மிக வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.

அவ்­வாறு அந்த இயக்கம் தொடர்பில் கருத்துச் சொல்­வ­தற்கு எந்­த­வி­த­மான அடிப்­ப­டையோ அல்­லது ஆதா ­ரமோ இல்­லாமல் அவர் ஒரு சலன புத்­தி­ யோடு அப்­ப­டி­யான வார்த்­தை­களை பாவித்­தி­ருப்­பதை ஏற்றுக் கொள்ள முடி­யாது.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் தற் ­கொலைக் குண்டுத் தாக்­குதல் நாட்டில் நடை­பெற்­ற­தற்குப் பின்னர் ஜனா­தி­பதி தான் விடு­தலைப் புலிகள் ஒரு கொள்­கைக்­காகப் போரா­டி­னார்கள் என்றும் அதனால் தான் மக்கள் அவர்­களை ஆத­ரித்­தார்கள் என்றும் கூறி­யி­ருந்தார்.

ஆனால் அப்­படி நினைத்து அதைச் சொன்­னவர் இனப்­பி­ரச்­சனைத் தீர்­விற்­காக ஒரு அடி­கூட முன்­னேற விட­வில்லை. இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட நாட்­டி­லுள்ள முக்­கி­ய­மான பல பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­விற்­காக நாட்­டி­லுள்ள 68 இலட்சம் மக்கள் அவ­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்தும் கூட ஜனா­தி­பதி பெரும் துரோகம் செய்­தி­ருக்­கின்றார்.

இப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைக் காண தடுத்­து­வ­ரு­வதுடன் சகலதையும் குழப்பி வருகின்றார். உண்மைக்கு மாறான அந்தக் கருத்துக் களை நாங்கள் எதிர்த்து நிற்கின்றோம். ஆகவே உண்மைக்கு மாறான இவ்வாறான சலன புத்தியோடு கருத்துக்களை வெளியிடாமல் இருப்பதே ஜனாதிபதி பதவிக்கு ஒரு சிறப்பு என்கிறாா்.