Breaking News

வாக்குறுதிக்கு அமைய இவ் வருட முடிவிற்குள் அரசியல் தீர்வை பெற வேண்டும் - மாவை

இரண்டு ஆண்டுகால அவகாசத்தில் அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என் பது காலத்தை கடத்தும் கதையாகவே உள்ளது.

வாக்குறுதிக்கு அமைய இவ்வாண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அர சியல் தீர்வை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமி ழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளாா். 

கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆரோக்கியமானது எனவும் அரசியல் தீர்வு குறித்த அரசாங்கத்தின் நிலைப் பாடுகள் மற்றும் கல்முனை விவகாரம் குறித்து வினவியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

 மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேட்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இதன்போது எமது மக்களின் அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் தீர்வு விட யங்கள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து பிரதமருக்கு தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளாா்.