பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சந்தேகநபர் ஒருவர் கைது
களுத்துறை – தொடங்கொட, போம்புவல பகுதியில் பொலிஸார் மீது தாக்கு தல் நடத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தித்தவெல்கொட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே கைது செய்யப் பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட் டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந் தேக நபரை நீதிமன்றத்தில் இன்று (17) ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது.
சூதாட்டம் நடைபெற்ற இடம் ஒன்றை சுற்றிவளைத்த சந்தர்ப்பத்தில், அங்கி ருந்தவர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனா்.
சூதாட்டம் நடைபெற்ற இடம் ஒன்றை சுற்றிவளைத்த சந்தர்ப்பத்தில், அங்கி ருந்தவர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனா்.