Breaking News

யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை பீடி சுற்றும் இலைகளுடன் மூவர் கைது.! (காணொளி)

யாழ்ப்பாணத்தில், 2 393 கிலாகிராம் பீடி சுற்றும் இலைகள் மற்றும் புகையி லையுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மண்டைதீவு சந்தி யில் இடப்பட்டுள்ள வீதித் தடையில் லொறியொன்றை சோதனைக்குட் படுத்தியபோதே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனா்.



இதன்போது, 44 பொதிகளில் ​பொதியிடப்பட்டிருந்த 1 359 கிலோகிராம் பீடி சுற் றும் இலைகளும் 31 பொதிகளில் இடப்பட்டிருந்த 1 034 கிலோகிராம் புகையி லையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கலேவல பகுதியைச் சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப் பட்டுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது கைது செய் யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.