பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல்.!
சிங்களப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உப்பாலி தென்னக்கோன் மற் றும் அவரது மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன் னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2009 ஜனவரி 23 ஆம் திகதி உப் பாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி மீது அடையாளம் தெரியாதோரால் கம்பஹா பகுதியில் தாக்கு தல் நடத்தப்பட்டது.
எனினும் அது குறித்து பல வருடகாலமாக சரியான விசாரணைகள் இடம்பெறாத நிலை யில், 2015 ஆம் ஆண்டு இதன் விசாரணைகள், குற்றப் புலனாய்வுப் பிரிவின் மற்றுமொரு பிரிவுக்கு குறித்த விசாரணை பாரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், தாக்குதல் சம்பவமானது மருதானை திரிப்போலி இராணுவப் புலனாய்வு முகாம் வீரர்களின் செயல் என்பது தொடர்பில் சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டு சிலர் கைதாகியுள்ளனா்.
மேஜர் புளத்வத்த உள்ளிட்ட அந்த குழுவினரே, 2008 ஆம் ஆண்டு த நேஷன் பத்திரிகையின் ஆசிரியர் கீத் நொயார், ஊடகவியலாளர் நாமல் பெரேரா ஆகியோர் மீதான தாக்குதல்களுடனும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்து சி.ஐ.டி.யினர் அவர்களை கைதுசெய்து நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தினர்.
எனினும் உப்பாலி தென்னக்கோனின் காரில் இருந்து பெறப்பட்ட கைவிரல் ரேகையை மையப்படுத்தி, திரிப்போலி முகாமின் லலித் ராஜபக்ஷ எனும் இராணுவ புலனாய்வு அதிகாரியை கைதுசெய்வது தொடர்பில் சி.ஐ.டி.யினர் சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியிருந்ததுடன், அதற்கான அனுமதி நேற்றைய தினம் வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ஷ இன்று காலை ஹங்வெல்ல பகுதியில் வைத்து கைதாகியுள்ளாா்.