Breaking News

‘தேர்தல் அவசியம் இல்லை; நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ – ரஞ்சித் ஆண்டகை (காணொளி)

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (31) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

பேராயர் இல்லத்தில் இந்த ஊடக வியலாளர் சந்திப்பு நடைபெற்றுள் ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் பல சந்தர்ப்பங் களில் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுக்களின் விசாரணை அறிக்கை கள் நிலவிரிப்பின் கீழ் காணப்படு கின்றன எனவும் அவை ஒருதரப்பானவை எனவும் கூறிய ஆண்டகை,

பக்கச்சார்பற்ற நீதியான குழுவை நியமித்து ஆராய்வதொடு, தாக்குதல் தொடர் பில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம், தேர்தல் தொடர்பில் பேசுவதற்கு முன்னர் பாரிய அழிவை ஏற்படுத்திய தாக்குதல் குறித்து சுயாதீன ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் தொடர்பில் கவனம் ​செலுத்தியதன் பின்னர் தாக்குதல் சம்பவம் பின்தள்ளப்படும் எனவும் தங்களுக்கு தேர்தல் அவசியம் இல்லை எனவும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நாட்டை அழிவுக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தை சிவப்புக் கம்பளத்தின் கீழ் மறைக்க வேண்டாம் என ஆளும், எதிர் மற்றும் நாட்டிலுள்ள ஏனைய கட்சிக ளிடம் கோரிக்கை விடுத்துள்ள ஆண்டகை, மக்களுக்கு வௌிப்படுத்தப்படாத நீதி என்னவென்பது குறித்தும் அவற்றை வௌியிடத் தடையாக உள்ள சக்தியையும் வௌிக்கொணர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



மேலும், ரத்துபஸ்வல ரொஷான் சானக்கவின் அறிக்கையை காணவில்லை. இந்த நிலை ஏனைய அறிக்கைகளுக்கும் ஏற்படுமா? என கேள்வி எழுப்பி யுள்ளார்.

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள ஆளும், எதிர்க்கட்சி மற்றும் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்கள் தனது முகத்தைப் பார்க்க வேண்டாம் எனவும் முத லில் வேண்டியவற்றை செய்து சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமித்து அறிக்கையை அம்பலப்படுத்துமாறும் கோரியுள்ளார்.

இதேவேளை, தமது மக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கினாலும் போதாது எனவும் மரணித்தவர்களை மீண்டும் பணத்தால் உயிர்ப்பிக்க முடியாது எனவும் கொழும்புப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.