வடிகாணுக்குள் பாய்ந்த கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ; உயிர் தப்பிய சாரதி.!
பெரியநீலாவணை பிரதான வீதியில் அதிக நிறையுடன் இறைச்சிக்காக கோழி களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்த வடிகாணுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை (29) காலை 6.15 மணியளவில் ஏறாவூர் பகுதியிலி ருந்து இறைச்சிக்காக கோழிகளை ஏற் றிக்கொண்டு கல்முனைப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த வேளை பெரிய நீலாவனையில் வைத்து குறித்த சம் பவம் நடைபெற்றுள்ளது.
இதனால் வீதியருகில் நின்றுகொண்டிருந்த மீன் வியாபாரி ஒருவர் மயிரிழை யில் உயிர் தப்பியுள்ளார். இந்நிலையில் லொறி சாரதி மற்றும் உதவியாளர் தெய்வாதீனமாக எதுவித காயங்கள் இல்லாமல் மீட்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் வடிகான், குறித்த லொறி, வீதியருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கும் சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் தொடர் பாக கல்முனை போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன் னெடுத்துள்ளனா்.