அக்கரப்பத்தனையில் சோகம் ; ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள் !
நுவரெலியா, அக்கரப்பத்தனை - டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளு ண்டு சென்ற இரட்டைச் சகோதரிக ளில் ஒருவரின் சடலம் நேற்று மீட் கப்பட்ட நிலையில் மற்றைய சிறுமி யின் சடலம் இன்று மீட்கப்பட்டுள் ளது.
டொரிங்டன் தோட்டத்திலிருந்து கொத்மலை ஓயாவுக்கு நீரைக் காவிச் செல் லும் கால்வாய் ஒன்றுக்கு அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல முயன்ற மாணவிகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதன்போது, மாணவி கள் இருவர் காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையில் அதில் ஒரு மாணவி நேற்றைய தினம் சடலமாக மீட்கப் பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ள இந்நிலையில், மற்றைய மாணவியும் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.