ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கை விஜயம்.!
அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக் கையாளர் கிளெமென்ற் நயா லெட்சோசிவூல் ஒன்பது நாள் பயணத்தை மேற் கொண்டு இன்று இலங்கையில் பயணத்தை முடிக்கவுள்ளாா்.
அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை மேற் கொள்வதற்காகவே அவர் இலங் கைக்கு விஜயமாகுவதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அவர் இன்று முதல் 26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். கொழும்பிலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டு, மதிப்பீடுகளை மேற் கொள்ளவுள்ளார்.
அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளையும், நீதித்துறை, ஊடகத்துறை, சிவில் சமூக குழுக்களையும், மனித உரிமை ஆணைக்குழுவையும் அவர் சந்தித்து பேசவுள்ளார்.
இவர் தனது பயணம் தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.