புதிய நியமனங்களை பொறுப்பேற்காது விடின் 7 வருடங்களுக்கு அரச தொழில் இல்லை - ராகவன்
மன்னாரில் மாவட்ட செயலகத்தில் புதன் கிழமை நடைபெற்ற நிகழ்வில் 77 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களும், 3 பேருக்கு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளும், 9 நபர்களுக்கு தகவல் தொழில் நுட்ப ஆசிரியர் பதவிகளுக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் இவருடன் இணைந்து மன்னார் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான சீ.ஏ.மோகன்ராஸ், வட மாகாண அமைச்சுக்களின் மகளீர் விவகார அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர், சுகாதார துறை அமைச் சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி அங்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தொடர்ந்து உரையாற்றுகையில், அபிவிருத்தி உத்தியோகத்தர் என்ற பதவிகளுக்கான நியமனக் கடிதங்களை நீங்கள் பெறுகின்றீர்கள்.
இந் நியமனத்தை பெறும் நீங்கள் உங்கள் கடமைகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். இப் பதவிகளுக்கான நியமனம் இது ஐந்தாவது தடவையாக வழங்கப்படுகின்றது. இப் பதவிகளைப் பெறுவோர் ஒழுக்கத்துடன் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும்.
இந் நியமனத்தை பெற்றவுடன் அடுத்து நீங்கள் செய்வது என்னவெனில் உடன் இடம்மாற்றம் கோருவது. சிலர் நியமனத்தை பெற்று ஒரு மாத காலமாக நியமிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாது இருப்பது.
குறிப்பிட்ட இடங்களுக்கு போகாமல் இருப்பதை அறிந்து ஒன்றரை மாதத்துக்குப் பின்தான் எமக்கு தெரியவரும் இவர்கள் தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லையென்று.
உங்களுக்கு பரீட்சை வைத்து பின் நேர்முகப் பரீட்சை வைத்து அதிகாரிகள் உங்களுக்காக தங்கள் நேரங்களை செலவழித்து இருந்தாலும் தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிப்பதும் இல்லை.
இவர்கள் தாங்கள் ஏன் பதவியை ஏற்கவில்லை என சொல்லாதிருக்கும்போதும் நாங்கள் அதிகாரிகள்தான் இதை கண்டு பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
நாங்கள் வட மாகாணத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம். அதாவது ஒரு வர் அரசு உத்தியோகத்துக்கான நியமனம் கோரி அதற்கான நியமனத்துக்கு உரித்துடையாகி அதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால் அவர் ஏழு வருடங்களுக்கு எந்த அரச உத்தியோகப் பதவிகளுக்கும் உரித்தாளராக இருக்க மாட்டார். இது விளையாட்டாகச் சொல்லவில்லை.
உண்மையானது. பதவிக்கு விண்ணப்பித்து அவற்றை ஏற்காது இருந்தால் அது மக்களுக்கும், அரசுக்கும் செய்யும் துரோகமானது. அதிகாரிகள் காலத்தை நேரத்தை செலவழித்து மக்களுக்கு நீங்கள் சேவை செய்ய வேண்டும் என செயல்படுகின்றனர்.
ஆனால் தாங்கள் நினைத்த இடத்துக்கு நியமனம் தரவில்லையென்றே இவர்கள் இந்த நிலைப்பாட்டுக்குச் செல்லுகின்றனர். ஒரு வருடமாவது குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சேவை செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர். நீங்கள் நியமனம் பெற்று குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல முடியாவிடில் இங்குள்ள வெற்றிடங்களை வெளி மாவட்டங்களிலிருந்து நிரப்பும் அதிகாரம் எங்களுக்கு உண்டு.
சிலருக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்கள் உண்டு. அதை நாங்கள் கலந்து ஆலோசித்து தீர்க்கக் கூடிய நிலையும் இருக்கின்றது. ஆகவே உங்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் உத்தியோகப் பணியை ஆரம்பியுங்கள். அரசாங்க உத்தியோகம் என்பது குறிப்பிடப்படும் இடத்துக்கு நாங்கள் செல்வோம் என்றே கையொப்பம் இட்டே கடமையை பொறுப்பேற்கின்றீர்கள்.
அது உங்களுக்கு மட்டுமல்ல நீதிவான் தொடக்கம் பொலிஸ் போன்ற அனை த்து உத்தியோகத்தர்களுக்கும் இது பொருந்துகின்றது. தற்பொழுது உங்களுக்கு வழங்கப்படுகின்ற நியமனத்தில் உங்களுக்கு விருப்பம் இல்லையேல் இன்று நான் நான்கு மணி வரை இங்கு நிற்பேன்.
என்னிடம் வந்து சொல்லுங்கள் நான் அந்த இடத்தில் உங்களுக்கு சேவை செய்ய முடியாது என தெரிவித்து உங்களை அப் பதவியிலிருந்து விடுவித்து விடுகின்றேன். மக்கள் சேவை மகேசன் சேவை என சொல்லுவார்கள்.
உங்கள் சேவையைப்பற்றி மகேசனிடம்தான் கேட்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும் ஒருநாள் இறைவனுக்கு கணக்கு கொடுத்தே ஆக வேண்டும். நான் மன்னாருக்கு வந்து கொண்டி ருந்தபொழுது மிகவும் கஷ்டப்படுகின்ற மக் களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
நாம் சேவை செய்வதற்கு குளிரூட்டும் அறையும் சுழல் கதிரையும் தரப்படு கின்றது. ஆகவே நமக்கு தரப்படுகின்ற சம்பளத்துக்கும் நாம் எந்த இனமாக மதமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் சேவை செய்யும் நபர்களாக இருக்க வேண்டும் என வேண்டி இறை ஆசீர் வழங்கி நிற்கின்றேன் என்றார்.