Breaking News

திருகோணமலை மாணவர்கள் படுகொலை- சந்தேகநபர்கள் விடுதலை காரணம் என்ன ?

திருகோணமலை மாணவர்கள் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை சர்வதேச நீதிமன்றத்தின் அவசியத்தை உணர்த்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள் ளது.

குறிப்பிடத்தக்க அளவிற்கு ஆதாரங் கள் காணப்பட்ட போதிலும் கொல்லப் பட்ட ஐந்து இளைஞர்களிற்கும் நீதியை வழங்க முடியாதுள்ளதை இலங்கை அதிகாரிகள் நிரூபித்துள் ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியா விற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

13 வருடங்களின் பின்னர் இந்த வழக்கில் எவரையும் குற்றவாளியென நிரூ பிக்க முடியாமல் போயுள்ளமை பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களை யும் பாதுகாக்க கூடிய சர்வதேச பங்களிப்புடனான நீதிமன்றம் அவசியம் என் பதை நிரூபித்துள்ளது எனவும் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற ஏனைய சர்வதேச சட்ட மற்றும் மனித உரிமைகள் போல இல்லாமல் இந்த விவகாரம் குறிப்பிடத்தக்க சர்வதேச கவனத்தை பெற் றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை ஐந்து மாணவர்கள் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இந்த படு கொலைகளிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டிய அர சாங்கத்தின் கடப்பாடு தொடர்ந்தும் நீடிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள் ளார்.

இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை நிறை வேற்றுகின்றதா என்பதை கண்காணித்து வரும் நாடுகள் திருகோணமலை மாணவர் படுகொலை விவகாரத்தை தங்கள் கரிசனைகளில் முக்கியமான விடயமென எச்சரிக்கை விடுத்துள்ளாா்.