வவுனியாவில் கோர விபத்து ; நால்வர் படுகாயம்
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (14.07) இரவு 9.30 மணியளவில் நடைபெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து மன்னார் வீதி யூடாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பய ணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதுடன் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவரையும் மோதி தள்ளியுள்ளது.
இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி சேத மடைந்துள்ளதுடன் இரு மோட்டார் சைக்கிளிலும் பயணித்துக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் வவுனியா - மன்னார் பிரதான வீதி பகுதியில் விபத்துக்கு காரணமாகவிருந்த மோட்டார் சைக்கி லினை போக்குவரத்து பொலிஸார் மறித்த சமயத்தில் பொலிஸாரின் தடுப் பினை மீறி பயணித்ததாக சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலி ஸார் தெரிவித்ததுடன்,
பொலிஸாரின் தடுப்பினை மீறி பயணித்ததன் காரணமாகவே இவர்கள் அதி வேகமாக பயணித்திருக்கலாம் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள் ளனா்.