அமெரிக்க சரக்கு விமானம் இலங்கை வருகை.! (காணொளி)
அமெரிக்காவின் மற்றுமொரு சரக்கு விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்து, இன்று அதிகாலை புறப்பட்டுச்சென்றுள்ளது. இந்த விமானம் அமெரிக்காவின் Western Global Airlines நிறுவனத்திற்கு சொந்த மானதாகும்.
அமெரிக்காவின் Western Global Airlines என்ற சரக்கு விமான சேவை நிறுவ னத்திற்கு சொந்தமான McDonnell Douglas – MD11 விமானமொன்று கடந்த வௌ்ளிக்கிழமை அதிகாலை கட்டு நாயக்கவிற்கு வருகை தந்து, சனிக் கிழமை அதிகாலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் Fujairah-விற்கு புறப்பட்டுச்சென்றது.
அமெரிக்காவின் Western Global Airlines என்ற சரக்கு விமான சேவை நிறுவ னத்திற்கு சொந்தமான McDonnell Douglas – MD11 விமானமொன்று கடந்த வௌ்ளிக்கிழமை அதிகாலை கட்டு நாயக்கவிற்கு வருகை தந்து, சனிக் கிழமை அதிகாலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் Fujairah-விற்கு புறப்பட்டுச்சென்றது.
அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மற்றுமொரு விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.50 அளவில் வருகை தந்துள்ளதுடன், இன்று அதிகாலை 12.40 அளவில் Fujairah விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
Guam தீவில் அமைந்துள்ள Anderson என்ற அமெரிக்க விமானப்படை முகாமில் இருந்து குறித்த விமானம் கட்டுநாயக்கவிற்கு வருகை தந்துள்ளது. பசுபிக் சமுத்திரத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள Guam தீவு, அமெரிக்க நிர்வா கத்தின் கீழ் காணப்படும் தீவு என்பதுடன் அமெரிக்காவின் விமானப்படை மற்றும் கடற்படை முகாம்கள் அங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இந்த விமானப் பயணங்கள் தொடர்பில் அதிகாரிகள் தெரிவித்த முரண்பாடான கருத்துக்களினால், சில விடயங்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்ற பின்னர், சாதாரண விமான மார்க்கத்தில் பயணித்த சந்தர்ப்பத்தில் பொருட்கள் மற்றும் சேவையை பெற்றுக்கொள்வதற்காக முத லாவது விமானம் வருகை தந்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், ஆடைகளைக் கொண்டு செல்வதற்காக குறித்த விமானம் வருகை தந்ததாக சிவில் விமான சேவை அதிகாரிகள் கூறினர். எவ்வாறாயினும், ACSA உடன்படிக்கையின் கீழ் அமெரிக்க இராணுவத்தின் விநியோக செயற்பாடுகள், இந்த விமானப் பயணங்களின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வி தொடா்ந்த வண்ணமுள்ளன.
அமெரிக்க அரசாங்கத்தின் சிவில் விமான சேவையுடன் இணைந்து செயற் படுவதற்கான உத்தியோகப்பூர்வ அனுமதி தமது நிறுவனத்திற்கு கிடைத் துள்ளதாக, கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் Western Global Airlines நிறு வனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி James K. Neff தெரி வித்துள்ளாா்.
அதற்கமைய, அமெரிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, உலகம் முழு வதும் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார்.
சிவில் விமான சேவை என்ற போர்வையில் இவ்வாறு வருகை தந்து புறப் பட்டுச்செல்லும் அமெரிக்க விமானங்கள், ACSA உடன்படிக்கையின் கீழ் இரா ணுவச் செயற்பாடுகளுக்காக பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் செயற்பாட்டின் ஒரு அங்கமா என மீண்டும் கேள்வி எழுந்துள்ளது.