ஐ.நா. தூதுவருடன் வழக்குகள் குறித்து பேச நீதிபதிகளுக்கு அழைப்பு விடுப்பதா?
நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் 3 வழக்குகள் தொடர்பில் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடு கள் விசேட தூதுவருடன் சந்திப்பை நடத்த வருமாறு நீதிபதிகளுக்கு வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் அழைப்பு விடுத்த கடி தம் ஒன்று தொடர்பில் சபையில் சர்ச்சை எழுந்துள்ளது.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன விசேட கூற்றொன்றை முன் வைத்தபோது,
நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவது நீதியரசர்களை பலவந்தப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரணாகும். ஆனால் வெளிவிவகார அமைச்சின் மேலதிக பதில் செயலாளர் அஹமத் ஏ. ஜவாதின் கையெழுத்தில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,
எமது நீதிமன்றங்களில் தற்போது இடம்பெற்றுவரும் வழக்குகள் சிலவற்றின் தற்போதைய நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசேட தூதுவருக்கு விளக்கம் தெரிவிக்க வருமாறு தெரிவித்து கடிதத்தின் பிரதிகள் பிரதமரம நீதியரசர், நீதி அமைச்சர் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் வெளிநாட்டு பிரஜைகளுடன் கருத்து பரிமாற்றிக்கொள்ள நீதிபதிகளுக்கு அழைப்பு விடுப்பதானது எமது நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
அதனால் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதன்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவிக்கையில், குறித்த கடிதத்தில் 3 வழக்குகள் குறிப்பிடப்பட்டு மற்றும் சில என தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
அதில் ரொஷான் சானக்க கொலை வழக்கு, ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான வழக்கு மற்றும் வெளிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான வழக்கு ஆகியவை தொடர்பாகவே கலந்துரையாடப்படுகின்றது.
இந்த சந்திப்பு இன்று (நேற்று) மாலை 3 மணிக்கு இடம்பெற்று உள்ளது. அத னால் இதில் தலையிட்டு இவ்வாறான கலந்துரையாடல் இடம்பெறுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதன்போது எழுந்த விஜேதாச ராஜபக்ஷ் தெரிவிக்கையில்,
இச் செயற்பாடானது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றமாகும். அதனால் இந்த விடயத்துக்கு அமைச்சர்களோ செயலாளர்களோ வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாக இருந்தால் அவர்களை நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
அதனைத்தொடர்ந்து விமல் வீரவன்ச தெரிவிக்கையில், வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர், அவருக்கு இல்லாத அதிகாரத்தை பிரயோகித்தே இந்த கடிதத்தை அனுப்பி இருக்கின்றார்.
நீதிமன்ற வழக்கு விசாரணை தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசேட தூதுவருக்கு கருத்து தெரிவிக்குமாறு சட்டமா அதிபர் உட்பட மற்றவர்களுக்கு கட்டளையிட இந்த நபருக்கு அதிகாரம் வழங்கியது யார்.
அதனால் இந்த நபரை பாராளுமன்றத்துக்கு அழைத்து இது தொடர்பில் அவரி டம் கேள்வி கேட்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கேட் டுக்கொள்கின்றேன் என்றார். இறுதியில் சபாநாயகர், இச் சந்திப்பை இடை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளாா்.