Breaking News

கூட்­ட­மைப்பு ஆத­ரவு நல்க ­வேண்டும் - தினேஷ் குண­வர்த்­தன

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வைத்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் முழு ஆத­ர­வையும் வழங்­க ­வேண்டும்.

வாக்­கெ­டுப்பில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக கூட்­ட­மைப்பு வாக்­க­ளிக்கும் என நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்துள்ளாா். 

இந்த அர­சாங்­கத்தை நம்பி தமிழ் மக்­க­ளுக்கு எந்த நன்­மையும் கிடைக்­க­வில்லை. வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வு­மில்லை. கூட்­ட­மைப்பு தொடர்ந்து அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வதில் அர்த்­த­மில்லையெனத் தெரிவித்துள்ளாா்.

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வைத்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு கூட்டு எதி­ரணி முழு­மை­யான ஆத­ர­வை­வ­ழங்கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் விப­க­ரிக்­கை­யி­லேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

 மேலும்

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஜே.வி.பி.யினரால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு நாங்கள் முழு­மை­யான ஆத­ரவை வழங்­குவோம். இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்­பின்­போது நாங்கள் ஆத­ர­வாக வாக்­க­ளிப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம்.

இதே­வேளை இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் வாக்­க­ளிக்கும் என்று நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம். கூட்­ட­மைப்பு வாக்­கெ­டுப்­பின்­போது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஆத­ரித்து வாக்­க­ளிக்கும் என்­பது எமது நம்­பிக்­கை­யாகும்.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை எதிர்­பார்த்தே தற்­போ­தைய அர­சா்­ங­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­கி­றது. ஆனால் அவர்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. வடக்கு, கிழக்குப் பகு­திகள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வு­மில்லை.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வுகள் கிடைக்கப் பெற­வு­மில்லை. எனவே அர­சாங்­கத்­திற்கு கூட்­ட­மைப்பு தொடர்ந்து ஆத­ரவு வழங்­கு­வதில் அர்த் ­த­மில்லை. அதனால் . அதனால் நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப் பின்போது கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க் கின்றோம்.

எங்களுடன் இணைந்து கூட்டமைப்பும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.