கோதுமை மாவின் விலை அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்.! (காணொளி)
இன்று (17) நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதி கரிக்கப்படவுள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் 7 ரூபாவால் அதிகரித்தமையால், வரி அடங் கலாக ஒரு கிலோகிராம் கோதுமை மா 8 ரூபா 50 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதன் காரணமாகவே, பாணின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மா னிக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன தெரிவித் துள்ளார்.
இதேவேளை, அனுமதியின்றி கோது மை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் பிறீமா மற்றும் செரண் டிப் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள் ளது.
இதேவேளை, கோதுமை மா, அத்தியாவசிய உணவுப் பொருளாக அறிவிக்கப் பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எம். பவுசர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் அவர் கூறி யுள்ளார்.
நேற்று (16) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரித்ததுடன், அது குறித்து விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 ரூபாவால் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் பிறீமா மற்றும் செரண்டிப் நிறு வனங்கள் அறிவித்துள்ளன.
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் விலை வீழ்ச்சியடைந் தமையால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே கோதுமையின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள் ளன.
எவ்வாறாயினும், அதிக விலையில் கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள தாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியின்றி கோதுமையின் விலை அதிகரித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கும் இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.