இம் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு
அரச சேவையாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளின் அதிகரிப்பு இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக 11 இலட்சம் வரையிலான அரச சேவையாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபா, பாதுகாப்பு பிரிவுக்கான மேலதிக கொடுப்பனவு, ஓய்வூதிய கொடுப்பனவில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவுகளை வழங்கவென அரசாங்கம் 40 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அரச சேவையாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவு 2500 ரூபா வழங்கப்படவுள்ளது. எனினும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை செலவுக்கான கொடுப்பனவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
வாழ்க்கைச் செலவுக்காக வழங்கப்பட்டு வந்த 7,800 ரூபாவை அவ்வாறே பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2019 வரவு–செலவுத்திட்ட யோசனைகளில் முப்படை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிப்பதாக நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டிருந்தார்.
முப்படையினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக அதிகாரிகளுக்கென வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை 2019 ஜனவரிமாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 23,231 ரூபா வரையும் ஏனைய பதவி தரத்திலானவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு 19,350 வரை யும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக இன்றுமுதல் முப்படைகளை சேர்ந்தவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த வீட்டு கூலிக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வுள்ளது. அதேபோன்று முப்படையினருக்குமான கொமாண்டோ கொடுப்ப னவு இன்று முதல் 5000 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கென அரச நிதியிலிருந்து 1175 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.