திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவில் ஹிஸ்புல்லா ஆஜர்
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவில் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள் ளாா்.
அவரால் ஏற்கனவே வௌியிடப்பட்ட கருத்து தொடர்பிலேயே இன்று வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
திட்ட மிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவில் இன்று ஆஜராகுமாறு ஏற் கனவே அவருக்கு அழைப்பு விடுக் கப்பட்டிருந்தது.
அதற்கமைய, இன்று முற்பகல் 10 மணியளவில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவில் ஆஜரா கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.