Breaking News

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு

உள்நாட்டுச் செய்திகள் 

  • SOFA மற்றும் Millennium Challenge Corporation உடன்படிக்கைகள் தொடர்பான நிலைப்பாட்டினை தௌிவுபடுத்துமாறு இலங்கை வணிக சபை அரசாங் கத்திடம் கோரியுள்ளது. 

  • ஐ.தே.கட்சியில் திறமையாளர் கள் இருப்பதனால், வெளியி லுள்ள வியாபாரிகள் கட்சிக்கு தேவையில்லை எனவும் நாட் டிற்கு தலைமைத்துவம் வழங்க முடியுமான தலைவர்கள் கட்சி யில் உள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள் ளார். 

  • முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய சுந்தர ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட் டுள்ளார். 

  • பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 

  • Batticaloa Campus குறித்து கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர் பான பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரை அறிக்கையை ஆராய்வதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப் பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

  • திருகோணமலை கடற்கரையில் 5 இளைஞர்களை சுட்டுக் கொலை செய் தமை தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை யின் 13 உறுப்பினர்களும் இன்று (3ஆம் திகதி) விடுவித்து விடுதலை செய் யப்பட்டுள்ளனர். 

  • ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் கடமையில் ஈடுபடு வதற்காக 61 பேர் கொண்ட இராணுவ குழாம் தென் சூடான் நோக்கி பய ணித்துள்ளது. 

  • வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள்

  • இந்திய மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தமையால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா செய் துள்ளார்.  
  • லிபியாவிலுள்ள அகதிகள் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக் குலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். 


  • ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி பதவிக்கு முதல் தடவை யாக பெண்ணொருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

விளையாட்டுச் செய்தி 

  • உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.