ஸ்ரீலங்கா எயர் லைன்ஸ் - மிஹின் லங்கா ; இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
லங்கா எயர் லைன்ஸ் நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம் என்பவற்றில் நடைபெற்ற மோசடி தொடர்பாக கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கைய ளிக்கப்படவுள்ளது.
2006 ஜனவரி மாதம் முதல் 2018 ஜனவரி வரையான காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் நிறுவனம், மிஹின் லங்கா தனியார் விமான சேவை நிறுவனம் ஆகியவற்றில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படும் முறைக்கேடுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் 2018 பெப்ரவரி 14 ஆம் திகதி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளனா்.