சிறையிலிருந்த பிள்ளையானை சந்தித்தார் மனோ
அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்தித்துப் பேசியுள்ளார்.
தனது அமைச்சின் நடமாடும் சேவை மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட இந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வுக்காக மட்டக்களப்புக்கு சென்றுள்ள அமைச்சர் நேற்றுக் காலை சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானை சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால தமிழர் அரசியல் நடப்புக்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் சில பொதுவான நண்பர்கள் சந்திரகாந்தனை சந்திக்கும்படி வலியுறுத்தியமையினால் இச் சந்திப்பை மேற்கொண்டதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளாா்.
இந்தச் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த பிள்ளையான், தேசிய அரசியலை விடவும் பிராந்திய அரசியலிலேயே தான் அக்கறை கொண்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இணைந்து செயற்படும் சாத்தியங்கள் குறித்து ஆராய முடியும் என்றும் அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக தெரிகின்றது.
இதனைவிட ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாகவும் இந்த விடயத்தில் உரிய தீர்மானங்களை இன்னமும் தனது கட்சி எடுக்கவில்லை என்றும் உரிய நேரத்தில் அந்த விடயங்கள் குறித்து ஆராயலாம் என்றும் பிள்ளையான் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
தான் சிறைக்குள் இருந்தாலும் தமது கட்சியின் உறுப்பினர்கள் வெ ளியில் செயற்பட்டு வருகின்றனர். எனவே அவர்களும் உங்களுடன் பேச விரும்புகி றார்கள் என்றும் அவர் அமைச்சரிடம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது.