Breaking News

நீதியரசருடன் கலந்துரையாடிய ஐ.நா-வின் விசேட பிரதிநிதி கலந்துரைத்த விடயங்களை வழங்க மறுப்பு (காணொளி)

சமாதானமாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பிலான ஐக்கிய நாடுக ளின் விசேட பிரதிநிதி Clement Nyaletsossi Voule இன்று ஊடகவியலாளர் சந்திப் பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

ரொஷேன் சானக்க கொலை, ரத்து பஸ்வல நிகழ்வு மற்றும் வெலிக் கடை சிறைச்சாலை சம்பவம் தொடர் பில் அவர் விசேட அவதானம் செலு த்தி இச் சந்திப்பை நடத்த திட்டமிட்டி ருந்ததாக கடந்த தினங்களில் பாராளுமன்றத்தில் அம்பலமானது.

சபாநாயகர் தலையிட்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளை சந்திப்பதை நிறுத்திய போதும் அவர் பிரதம நீதியரசரை சந்தித்தார். இந்நிலையில், தாம் எந்த நாட் டிற்கு சென்றாலும் இவ்வாறு சாதாரணமான சந்திப்புகளை மேற்கொள்வதாக வும் தமது பழைய அறிக்கைகளைக் கண்ணுற்றால் அது தௌிவாகும் எனவும் Clement Nyaletsossi Voule ஊடகவியலாளர் சந்திப்பின் போது தௌிவுபடுத்தி யுள்ளாா்.

எனினும், பிரதம நீதியரசருடன் அவர் கலந்துரையாடிய விடயங்களை ஊட கங்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டார். ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியொ ருவருக்கு பிரதம நீதியரசர் அழைப்பு விடுப்பதில் காணப்படக்கூடிய இயலுமை சிக்கலுக்குரியதாகும்.

ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் ஒன்றான நீதித்துறையின் தலைமை அதி காரியை அழைப்பதற்கு வௌிநாட்டு பிரதிநிதி ஒருவருக்கு இருக்கும் அதி காரம் யாது?

இந்நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்தவில்லை என்று எவ்வாறு கூற முடியும்?

பிரதம நீதியரசரை அழைப்பது நாட்டின் நிறைவேற்றதிகார தலைவரான ஜனாதிபதியை அழைப்பதற்கு சமனானது அல்லவா? ஜனாதிபதியின் பதவிப்பிரமாணம் பிரதம நீதியரசர் முன்னிலையிலேயே இடம்பெறுகின்றது. 



நாட்டிற்கும் உலகிற்கும் ஐ.நா காண்பிக்கும் கேலிக்கூத்தான விடயமாக இது காணப்படுகின்றது அல்லவா?

இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமை கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை காட்டும் முயற்சி, அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படாமைக்கு காரணம் என்ன?

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக குரல் கொடுத்த சர்வதேச அமைப்புகள், அமெரிக்காவில் 16 வருடங்களுக்கு பின் மரண் தண்டனை அமுல்படுத்துவது குறித்து மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் முன்வைத்த நிலைப்பாடு என்ன?

ஈராக், லிபியா, சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தலையீடு செய்து அங்கு மனித உரிமை மீறல்களில் அமெரிக்கா ஈடுபட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறான கொள்கையில் செயற்பட்டது?

யாரும் சிந்திக்கா விட்டாலும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் உள்ள னர்.