கட்டுநாயக்காவில் தரையிறக்கப்பட்ட விமானம் இன்று பயணம்.!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட, நிலத்தடியைக் கண் காணிப்பது உள்ளிட்ட விசேட செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் விமா னம் இன்று (9ஆம் திகதி) நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது.
குறித்த விமானம் இன்று மும்பையை நோக்கி புறப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்கு வரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் எயார் Z-S-A-S-N ரகத்திற் குரிய Basler BT-67 என்ற விமானம் கட ந்த சனிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதனை பயன்படுத்தி சுமார் 1000 மீற்றர் ஆழத்தில் நிலத்திற்கடியில் உள்ள வற்றை கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனசியாவில் இருந்து இந்த விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது.
இதனை பயன்படுத்தி சுமார் 1000 மீற்றர் ஆழத்தில் நிலத்திற்கடியில் உள்ள வற்றை கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனசியாவில் இருந்து இந்த விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது.