யால தேசிய பூங்காவில் துப்பாக்கிப் பிரயோகம் ; ஒருவர் காயம்
கதிர்காமம் - யால வனப்பகுதியில் மணிக்கங்கையில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்டவர்களுக்கும், வன பாதுகாப்பு அதிகாரி களுக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணிக்க கங்கையில் சட்டவிரோதமாக மணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடு வதாக வியாழக்கிழமை வன பாதுகாப்பு அதிகா ரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக் கமைய சந்தேக நபர்களை கைது செய்வ தற்காக சென்ற வன அதிகாரிகள் மீது சந் தேக நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
மேலும் சந்தேக நபர்களுக்கும் வன பாதுகாப்பு அதிகாரிகளுக்குமிடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்த சந் தேக நபரொருவர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.
கதிர்காமம் - வள்ளியம்மா கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். மேலும் சந்தேக நபர்கள் மூவர் சிறு காயங்களுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது மாணிக்க கல் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற் றும் 3 தொலைபேசிகளும் மீட்கப்பட்டன. மேற்படி சம்பவம் தொடர்பான மேல திக விசாரணைகளை கதிர்காம பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.