மக்களின் காணிகளை விடுவிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் - சேனாதிராசா
தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிப்பதன் மூலம் சமாதானத்தையே பாது காப்பையே ஏற்படுத்தாது காணிகள் விடுவிப்பதன்மூலம் தான் சமாதானத்தை பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளாா்.
பலாலி விமான நிலையத்தை சர்வ தேச விமான நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை யாற்றுகையிலேயே இவ்வாறு தெரி வித்துள்ளாா்.
அவர் அங்குமேலும் தெரிவிக்கை யில் யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவத்தினரின் பிடிக்குள் இருப்பது அநீதியாகவுள் ளது. அந்த நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
நிலங்களை அபகரிப்பதும் இராணுவக் கட்டுப்பட்டில் வைத்திருப்பதும் இந்த நாட்டில் சமாதானத்தையே பாதுகாப்பையே பெற்றுத் தராது. எமது மக்களுக்கு தமது சொந்த நிலங்களில் மீளக்குடியமர வைப்பதும் அவர்களது கோரிக்கை கள் நிறைவேற்றப்படுவதன் மூலம்தான் சமாதானத்தை பாதுகாப்பையும் ஏற்படுத்த முடியும்.
இந்தியப் பிரதமர் அண்மையில் இலங்கைக் கு வந்திருந்தபோது இலங்கைக்கு விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை அது இந்தியாவுக்கும் விடுவிக்கப்பட்ட எச்சரிக்கையாகும். எனத் தெரிவித்துள்ளார். ஆகையால் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு அந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டுமெனத் தெரி வித்துள்ளாா்.