சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு
சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு நடைபெறுவதாக சூழலியலாளர்கள் குற் றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
சுமார் 8 ஏக்கர் காட்டுப்பகுதி தற்போது அழிக் கப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குடிநீர் போத்தல் தயாரிக்கும் தொழிற் சாலை ஒன்று அமைக்கப்படுவதன் காரணமாகவே காடழிப்பு இடம்பெறு வதாகவும் இந்த விடயம் தொடர்பில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் கலவான வனவள உத்தியோகத்தர் M.D. பண்டாரநாயக்கவிடம் வினவிய போது, அந்த தொழிற்சாலைக்கு எவ்வித அனுமதியும் வழங்கவில்லையெனத் தெரிவித்துள்ளாா்.
குறித்த பகுதியில் ஆய்வு செய்து, சுற்றாடல் அறிக்கை ஒன்றும் கோரப்பட் டுள்ளதாக வனவள உத்தியோகத்தர் தெரிவித்தார். சுற்றாடல் அறிக்கை கிடைத்ததன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மேலும் தெரிவித்துள்ளாா்.