பொது மக்களின் காணிகளை அபகரித்த வன இலாகா.!
முல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய்ப்பகுதியில், கடந்த 1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் உப உணவுப் பயிற் செய்கைக்கென தமிழ் மக்களுக்கு வழங் கப்பட்ட காணிகளை, வன வளத் திணைக்களம் அபகரித்துள்ளது.
தமது காணி விடுவிப்பைக் கோரியி ருந்த நிலையில், வன வளத் திணைக் களத்தினர் தமது காணிகளை விடு விப்பதாக தெரிவித்திருந்தபோதும் இதுவரை விடுவக்கவில்லை என காணி உரிமையாளர்கள் தெரிவித் துள்ளனா்.
எனவே தமது காணிகளை உடன டியாக விடுவிக்க உரியவர்கள் நடவ டிக்கை எடுக்கவேண்டுமெனவும் இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எமக்கு கடந்த 1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் குஞ்சுக்குளம், கோட்டைக் கேணி, குளத்துச் சோளகம், காயாவடிக் குளம் போன்ற பகுதிகளில் உப உண வுப் பயிா் செய்கைக்காக வழங்கப்பட்ட காணிகளைத் தற்போது வன வளத் திணைக்களத்தினர் அபகரித்துள்ளனர்.
இதேவேளை காயாவடிக் குளம் பகுதியில் 1984ஆம் ஆண்டு இடப்பெயர்விற்கு முன்னர், 36இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு குடியிருந்தன. இவ்வாறு கடந்த 1984ஆம் ஆண்டு எமது பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக இராணு வத்தினரால் வெளியேற்றப்பட்ட நாம், கடந்த 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டோம்.
ஏறக்குறைய 30ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நீண்ட கால இடப்பெயர்வை நாம் சந்தித்திருந்ததால், எமது பயிர்ச்செய்கை நிலங்கள் அனைத்தும் பெருங் காடுகளாக காட்சியளிக்கின்றன.
இந் நிலையில் பாரிய காடாக காணப்படும் எமது பயிர்ச்செய்கை நிலங்களை தமக்குரியதெனத் தெரிவித்து, வன வளத் திணைக்களத்தினர் கடந்த 2016ஆம் ஆண்டு எல்லைக் கற்களை நாட்டினர். வன வளத் திணைக்களத்தின் இத் தகைய செயற்பாட்டிற்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்தோம்.
அதையும் மீறி அவர்கள் தமது எல்லைக் கற்களை நாட்டினர். இவ்வாறு அப டிகரிக்கப்பட்ட எமது காணிகளை விடுவிக்குமாறு வனவளத் திணைக்களத்தி னரிடம் கோரியிருந்த நிலையில், அளவீடு செய்து 95ஏக்கர் வரையன காணி களை விடுவிப்பதாக தெரிவித்திருந்தனர்.
எனினும் இதுவரை அவர்கள் எமது காணிகளை விடுவிக்கவில்லை. குறிப்பாக இந்தப் பகுதிகளில் எமக்கு 200 ஏக்கருக்கு மேற்பட்ட உபஉணவுப் பயிர்ச் செய்கைக்கு வழங்கப்பட்ட காணிகள் காணப்பட்டன.
இப் பகுதியில் பெரும்பான்மை இன மக்களுக்கு ஒருவருக்கு 25ஏக்கர் வீதம் பழமரச் செய்கைக்கென காணிகள் வழங்கப்பட்டிருந்தன. அதில் 105ஏக்கருக் கும் மேற்பட்ட எமது காணிகளும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாம் காணி விடுவிப்பைக் கோரியிருந்த நிலையில், அள வீடு களைச் செய்து 95ஏக்கர் வரையான காணிகளை விடுவிப்பதாக வனவளத் திணைக்களத்தினர் தெரிவித்திருந்தபோதும் இதுவரை விடுவிக்கவில்லை.
இவ்வாறு எமது காணிவிடுவிப்பில் இழுத்தடிப்புச் செய்து மீதமாகவுள்ள காணிகளையும் பெரும்பான்மை இன மக்களுக்கு வழங்க எத்தனிக்கின்றனரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. எனவே உரிய அதிகாரிகள் எமது காணி களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எனத் தெரிவித்துள்ளாா்.