தேர்தலின் பின்னரும் ஐ.தே.க.வே ஆட்சியமைக்கும் - மனோகணேசன்
தேர்தல்களின் பின்னர் புதிய அரசாங்கம் ஒன்று உருவாகும். அதனால் வேறொரு அரசாங்கம் ஆட்சியமைக்கப் போவதாகத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது.
தேர்தலின் பின்னர் புதிதாக ஆட்சியமைக்கும் அரசாங்கமும் நாங்களாகத் தான் இருப்போம். இந்த ஆட்சியில் குறைபாடுகள் இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கத்தை விடவும் எமது அரசாங்கம் பல மடங்கு சிறந்ததாகும் என்று தேசிய ஒருமைப்பபாடு, அரசகரும மொழி கள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளாா்.

அருண் பிரசாத் அறக்கட்டளையின் தலைவர் எம்.மாணிக்கவாசகத்தினால் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலைக்கான காணி கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படுதலும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழி கள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் அப்பாடசாலைக்கு வழங்கப்படும் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை அருண் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: வத்தளை பிரதேசத்தில் தமிழ் பாடசாலை ஒன்றை நிறுவுவது சுமார் 10 வருடங்களுக்கும் அதிகமான காலக்கனவு என்றே கூறவேண்டும். அது இன்று (நேற்று) நனவாகியிருக்கிறது.
பலவருட காலமாக கொழும்பில் தமிழ் பாடசாலை ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கூட இன, மத, அரசியல் காரணங்களினால் அது சாத்தியமற்றுப் போனது.
எனினும் இப்போது மாணிக்கவாசகத்தின் பங்களிப்பின் மூலம் அது நிறைவேறியிருக்கிறது. சட்டத்தை வளைத்து அல்லது உடைத்து என்றாலும் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இப்பாடசாலைக்கான அனுமதியைக் கோரிய போது, புதிதாக அமைக்கப்படும் பாடசாலைகள் தனியொரு இனத்தையோ, மதத்தையோ அல்லது மொழியையோ சார்ந்தாக இருக்க முடியாது என்று எனக்குச் சட்டத்தைப் போதித்தார்கள்.
ஆனால் சகோதரமொழிப் பாடசாலைகள் புதிதாக நிர்மாணிக்கப்படும் போது இந்தச் சட்டம் செயற்படுவதில்லையே என்று நான் அவர்களிடம் கேட்டேன். எனவே இந்தக் காணியில் இந்து தமிழ் பாடசாலை தான் அமைக்க முடியும் என்றும் கூறினேன்.
இறுதியாக தமிழ் பாடசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. எனவே சட்டத்தை வளைக்க வேண்டிய இடத்தில் வளைத்து, அமைச்சரவையில் சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து, முறைக்க வேண்டிய இடத்தில் முறைத்து எமக்கு வேண்டிய நல்ல காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.
அதேபோன்று களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேசத்திலும் ஐந்து ஏக்கர் நிலத்தில் தமிழ் பாடசாலை ஒன்று விரைவில் அமைக்கப்படும். ஆரம்பத்தில் எனது அமைச்சு குறித்து சிலர் கிண்டல் செய்தார்கள், சிரித்தார்கள். ஆனால் அவற்றை நான் பொருட்படுத்தவில்லை.
இன்றளவில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு அபிவிருத்திகளுக்கும் பல மில்லியன் ரூபாவை வழங்கக்கூடிய நிலைக்கு எனது அமைச்சைக் கொண்டுவந்திருக்கிறேன். ஒரு பாடசாலையை அமைப்பதென்பது நூறு கோவில்கள், நூறு பள்ளிவாசல்கள், நூறு விகாரைகள், நூறு தேவாலயங்களை அமைப்பதற்குச் சமனாகும்.
எதிர்வரும் தேர்தல்களின் பின்னர் புதிய அரசாங்கம் ஒன்று உருவாகும். அத னால் வேறொரு அரசாங்கம் ஆட்சியமைக்கப் போவதாகத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. தேர்தலின் பின்னர் புதிதாக ஆட்சியமைக்கும் அரசாங்க மும் நாங்களாகத் தான் இருப்போம்.
இந்த ஆட்சியில் குறைபாடுகள் இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டுக்கு முன் னர் காணப்பட்ட அரசாங்கத்தை விடவும் எமது அரசாங்கம் பலமடங்கு சிறந்த தாகும்.