நாணய விதிச் சட்டத்தை திருத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது - மஹிந்த
அரசியல் நோக்கங்களுக்காக நாணய விதி சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது. தேவைக்கேற்ப கொண்டு வருவதாயின் பொருளாதார நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
பொருளாதார ரீதியில் நாடு நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ள நிலையில் இவ்வாறான சட்டதிருத்தங்கள் நிலைமையினை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என எதிர்க்கட்சி தலை வர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள் ளாா்.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் குழு அறை 7 இல் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
1949 ஆம் ஆண்டு 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினர் பதவியிலிருந்து திறைசேரியின் செயலாளரை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்வதன் ஊடாக மத்திய வங்கி தொடர்பில் திறைசேரிக்கு இருக் கும் கட்டுப்பாடு இல்லாமல்போவதுடன் , சுயாதீனமாக நாணயத்தை மத்திய வங்கி அச்சிடுவதற்கான சூழல் ஏற்பட்டுவிடும்.
அது மாத்திரமன்றி திறைசேரியின் செயலாளர், ஜனாதிபதியினாலேயே மத்திய வங்கியின் நாணய சபைக்கு நியமிக்கப்படுகிறார். எனினும், திருத்தத்தின் ஊடாக அதனை ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஏற்கனவே நாடு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், நாணய நிதிச்சட்டத்தில் அரசியல் தேவைகளுக்காக திருத்தங்களை மேற்கொண்டால் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும் என்றார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன குறிப்பிடுகையில், நாணய விதிச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்தில், பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்விமான்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி இந்தச் சட்டத்திருத்தம் நிதி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது. நாட்டின் நிதி நிலைமையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த திருத்தம் சரியான முறையில் மீண்டும் சரிசெய்யப்படாவிட்டால் குழுநிலையில் அதனை எதிர்க்க வேண்டி ஏற்படும் மத்திய வங்கி நாட்டின் நாணய விடயத்தையும், திறைசேரி நிதி விடயத்தையும் கையாளுகின்றன.
இருந்தபோதும் மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் இடையில் உள்ளகத் தொடர்புகள் இருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே திறைசேரியின் செயலாளர் மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவார். எனினும், நாணய விதிச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து இதனை மாற்றுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.
இதனால் மத்திய வங்கி மீது நிதியமைச்சு கொண்டிருக்கும் கட்டுப்பாடு கைவிடப்படும். இதனால் மத்திய வங்கி சுயாதீனமாகச் செயற்படுவதற்கான சூழல் ஏற்படும் அது மாத்திரமன்றி, மத்திய வங்கி ஏனைய வர்த்தக வங்கிகளைப் போன்று அரசாங்கத்திடமிருந்தே வட்டியைப் பெற்று செயற்படக்கூடிய சூழல் ஏற்படலாம்.
இது நாட்டில் மேலும் 2015ம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி களை போன்று அரச ஆதரவுடன் மோசடிகள் இடம் பெறுவதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்குமெனத் தெரிவித்துள்ளாா்.