நாட்டின் சில பகுதிகளில் இடைக்கி டையே மின்வெட்டு அமுலாகக் கூடு மென, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செய லாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள் ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய் யப்பட்டுள்ள மனுக்களை விசாரிப்பதற்காக 7 பேர் கொண்ட உயர் நீதி மன்றத்தின் நீதியரசர் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர குற் றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக்ஸ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டுச் செய்தி
வெனிசூலாவில் தொடரும் அரசியல் பதற்றநிலைமையைத் தணிப்ப தற்கு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவ தற்குத் தயார் என அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்தி
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை குழாம் நாடு திரும்பியுள்ளது.
திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!
Reviewed by Thamil
on
7/09/2019
Rating: 5