உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகளுக்கு இன்று முதல் தடை
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள் அனைத்தையும் இன்று (30) நள்ளிரவுடன் நிறைவுசெய்ய வேண்டும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டத் திற்கு அமைய பரீட்சைகள் நடைபெற வுள்ளன.
அதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சை கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்தும் இன்று (30) நள்ளிரவுடன் தடை செய்யப் பட்டுள்ளன.
அதற்கு பின்னர் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் நடாத்தப்படும் பட்சத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமெனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதேநேரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட் சையை எதிர்வரும் 4 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.