மீளப் பதவியேற்கும் முஸ்லிம் எம்.பி.க்கள்
அண்மையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ரிஷாத் பதியூதீன் உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள் ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் னர் முஸ்லிம் சமூகத்தின் மீதும், முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் சிலரின் மீதும் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள், வகைதொகையின்றிய கைதுகள் மற்றும் கண்டி உண்ணா விரதத்தினால் நாட்டில் ஏற்படவி ருந்த பேரழிவு ஆகியவற்றின் அச்சம் காரணமாக அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக பதவி விலகி இருந்தனர்.
எனினும் பின்னர் கபீர் காசிம், ஹலீம் ஆகியோர் மீண்டும் பதவிகளை பொறுப் பேற்றனர். எனினும் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டி ருந்த பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணும் வரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் பாராளு மன்ற உறுப்பினர்கள் பதவியை ஏற்பது இல்லை எனவும் அப்போது முடிவு செய்யப்பட்டது.
அதன்பின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சி யான பேச்சு வார்த்தைகளை அடுத்து முஸ்லிம்களின் விடுதலை உட்பட சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்ட போதும் இன்னும் சில பிரச்சினை களுக்கான தீர்வை பெற வேண்டியிருந்ததாகவும் முஸ்லிம் எம்.பிக்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
அத்துடன் கட்ந்த 26 ஆம் திகதி பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண் டும் தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்திருந்தது.
ஜனாதிபதி செயலகத்தின் இந்த அழைப்பு குறித்து கடந்த 25 ஆம் திககி மாலை முன்னாள் அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாத் மற்றும் பெளதி ஆகியோர் விரி வாக சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இச் சந்திப்பின் பின் பின்னர் ரிஷாத் பதியூதீன் 26 ஆம் திகதி காலை ஜனாதி பதியை சந்தித்து பதவியை துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பதவி ஏற்க முடியாத சூழ்நிலை குறித்த நிலைப்பாட்டை எடுத்துரைத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான மீண்டுமொரு சந்திப்பின் பின்னர் பிறி தொரு தினத்தில் அது பற்றி தீர்மானித்துக்கொள்ள முடியும் எனவும் ரிஷாத் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.