புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு
உள்நாட்டுச் செய்திகள்
- இலங்கைக்குக் கொண்டு வரப் பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொட ர்பில் பிரித்தானிய சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகா ரத் திணைக்களத்தினால் விசார ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தாக, ‘டெலிகிராப்’ பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
- சம்மாந்துறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொட ர்பில் தகவல் வழங் கிய ஒருவருக்கு ஜனாதிபதியால் 50 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
- தவறான குருதி வழங்கப்பட்டதால் சிறுவன் உயிரிழந்தமை தொடர் பிலான வழக்கின் சந்தேக நபர்களை மன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக் களப்பு நீதவான் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பிலான வழக்கின் முதலா வது பிரதிவாதியான அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்கான பிடி யாணை பிறப்பிப்பது தொடர்பிலான உத்தரவை எதிர்வரும் 9ஆம் திகதி பிறப்பிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐ.நா. விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கை நீதிபதிகளை சந்திப்பதற்கு மேற் கொண்ட முயற்சி தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப் பிரதிவாதம் ஏற் பட்டுள்ளது.
- அரச நிறுவனங்களில், 16 800 பட்டதாரிகளைப் பயிலுனர் பட்டதாரிகளாகப் பயிற்சியளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
- பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து T56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமற்போனமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புல னாய் வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- களனி ரயில் நிலைய வீதி பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுத்துச் சென்ற மருந்து உற்பத்தி நிலையத்திலிருந்து விநியோகிக்கப்பட்ட சில மருந் துகள் நாட்டின் 12 இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டதாக, தேசிய ஔ டதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.
- நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய மழையுடனான வானிலை காரண மாக நாட்டிலுள்ள 33 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள்
- அமெரிக்க எல்லைக்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை மட்டுப்படுத்தும் வகையிலான நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து குவாத்தமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலஸ் (Jimmy Morales) மேன்முறை யீடு செய்துள்ளார்.
- கர்நாடக சட்ட மன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்ததை அடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பத வியை இராஜினாமாச் செய்துள்ளார்.
- வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.