காலத்தை இழுத்தடிப்பது இலங்கை அரசின் கபடத்தனத்தை வெளிப்படுத்தி : ஐ.நா-வில் கஜேந்திரகுமார் உரை (காணொளி)
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றியுள்ளாா்.
30/ 1 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட திலிருந்து அதற்கு இணை அனுச ரணை வழங்கிய இலங்கை அரசாங் கத்தின் உயர்மட்ட தலைவர்களான ஜனாதிபதியும் பிரதமரும் குற்றவி யல் நீதியையும் பொறுப்புக்கூறலை யும் நிராகரித்து வருவதாக தனது உரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக் காட்டியுள்ளாா்.
இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்களோ குற்றவியல் நீதியையும் பொறுப்புக் கூறலையும் கோரி நிற்க, இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய பிரதமரோ மன்னிப்போம் மறப் போம் என வெளிப்படையாகக் கூறியதாக தெரிவித்துள்ளாா்.
மேலும், நாடுகளை மையப்படுத்திய இலங்கை மீதான தீர்மானங்களை நியாயப்படுத்து வதற்கான முக்கிய காரணிகளான குற்றவியல் நீதியையும் பொறுப்புக் கூற லையும் தொடர்ச்சியாக இலங்கை அரசு நிராகரித்து வருகின்ற நிலையில்,
ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது பாதிப்படைந்த மிகப்பெரும்பான்மை யான தமிழ் மக்களுக்கு, குற்றவியல் நீதியை வழங்க முடியாது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரி வித்துள்ளாா்.
தீர்மானத்தில் கூறப்பட்ட ஏனைய விடயங்களில் பெயரளவிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னேற்றங்களாக காண்பிப்பதும், தாம் வழங்கிய உறுதிப் பாட்டை நிறைவேற்றாமல் காலத்தை இழுத்தடிப்பதும் இலங்கை அரசின் நேர்மையற்ற பண்பையும் கபடத்தனத்தையும் வெளிப்படுத்துவதாக மேலும் தெரிவித்துள்ளாா்.