புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு
உள்நாட்டுச் செய்திகள்
- அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத் தின் கிளை அல்லது அதனுடன் தொட ர்புடைய எந்தவொரு நிறுவனத்தை யும் இலங்கையில் ஸ்தாபிக்க அனு மதி வழங்கப்படவில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீர மைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் தொடர் புடைய சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக்கணக்குகள் தொடர்பான தக வல்களை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்குமாறு உத்தரவிட்டுள் ளது.
- 14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதை வில்லைகளுடன் மத்திய தபால் பரிமாற்றகத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளார்.
- சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அடங்கிய கொள் கலன்களில் கழிவுப்பொருட்கள் அடங்குவதால் மீண்டும் திருப்பியனுப்பு வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுங்கத் தரப்பினர் தெரிவித்துள் ளனர்.
- சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களையும் தடுத்துவைத்து விசாரணை செய் வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- ரத்துபஸ்வல துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தை நியமிக்கு மாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
- 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
- முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட திருவேலைத் தாங்கிய, ஆடிவேல் சக்திவேல் பவனி ஆரம்பமாகியுள்ளது.
- ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிப் பகிஷ் கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
வௌிநாட்டுச் செய்திகள்
- ஈரான் மற்றும் யேமனை அண்மித்த கடற்பிராந்தியங்களைப் பாது காப்ப தற்காக சர்வதேச இராணுவக் கூட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டு மென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- பிரித்தானிய பிரதமரையும் பிரித்தானியாவையும் அமெரிக்க ஜனாதிபதி அவமதித்துள்ளதாக, பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெரமி ஹன்ட் (Jeremy Hunt) குற்றஞ்சுமத்தியுள்ளார்.
- தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரைத் திறப்பதற்கு, கர்நாடக முதல்வர் குமாரசாமி அனுமதி வழங்கியுள்ளார்.
- உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் நியூஸிலாந்து தொடர்ந்து இரண் டாவது தடவையாகவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.