உலகக்கிண்ண வரலாற்றில் பங்களாதேஷின் சகீப் அல் ஹசன் புதிய சாதனை
உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அரைச்சதம் கடந்து 5 விக்கெட் பெறு தியைப் பதிவுசெய்த இரண்டாவது வீரராக பங்களாதேஷின் சகீப் அல் ஹசன் (Shakib Al Hasan) பதிவாகியுள்ளார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட் டியில் அவர் இந்த மைல்கல்லை எட் டியுள்ளார்.
சவுத்ஹெம்டனில் நடை பெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சார்பாக சகீப் அல் ஹசன் 51 ஓட்டங்களை பெற்றுள்ளாா்.
போட்டியில் 36 ஓட்டங்களை பெற்றபோது உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற் றில் பங்களாதேஷ் சார்பாக 1000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை சகிப் அல் ஹசன் பெற்றார். முஸ்பிகுர் ரஹிம் 83 ஓட்டங்களை பெற் றுக்கொள்ள பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ஓட் டங்களை பெற்றது.
முஜிபுர் ரஹ்மான் 3 விக்கெட்களை வீழ்த்தினார். வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் சார்பாக ரஹ்மத் ஷா மற்றும் குல்பதீன் நய்ப் ஜோடி 10.5 ஓவர்களில் 49 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தது.
எனினும் ரஹ்மத் ஷா 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. ஹஸ்மதுல்லா சஹிடி, அஸ்கர் ஆப்கான், மொஹமட் நபி, இக்ரம் அலி உள்ளிட்ட வீரர்களால் 25 ஓட்டங்களை கடக்க முடியவில்லை. அணித்தலைவர் குல்பதீன் நய்ப் 47 ஓட்டங்களை பெற்று ஆறுதலளித்தார்.
சமியுல்லா ஷின்வாரி 49 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்காக போராடினார். சகீப் அல் ஹசன் 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆப்கானிஸ்தான் அணியால் 47 ஓவர்க ளில் சகல விக்கெட்களையும் இழந்து 200 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந் தது. போட்டியில் பங்களாதேஷ் 62 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இதன்போது உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அரைச்சதம் கடந்து 5 விக் கெட் பெறுதியைப் பதிவுசெய்த உலகின் இரண்டாவது வீரராக பங்களா தேஷின் சகீப் அல் ஹசன் பதிவானார். இந்த மைல்கல்லை இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான யுவராஜ் சிங் 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எட்டியிருந்தார்.
அத்துடன் பங்களாதேஷ் சார்பாக உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரொன்றில் 5 விக்கெட் பெறுதியைப் பதிவுசெய்த முதலாவது வீரராகவும் சகீப் அல் ஹசன் வரலாற்றில் இணைந்துள்ளார்.