தமிழ் அரசியல் இக்கட்டான நிலைமைக்குள் பிரவேசித்துள்ளது.!
தமிழ் அரசியல் ஓர் இக்கட்டான நிலைமைக்குள் பிரவேசித்திருக்கின்றது. இந்த நிலைமையில் இருந்து அது எவ்வாறு வெளிவரப் போகின்றது என்பதும், பல்வேறு நெருக்கடிகளுக்கும், அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ள தமிழ் மக்களை எவ்வாறு அது வழிநடத்தப் போகின்றது என்பதும் சிந்தனைக்குரியது.
நல்லாட்சி அரசாங்கம் வாய்ப்பேச்சில் தனது வீரத்தைக் காட்டியதேயொழிய, காரியத்தில் எதனையும் சாதிக்கவில்லை. எதேச்சதிகாரத்தை ஒழித்துக்கட்டி, ஜனநாயகத்துக்குப் புத்துயிரளித்து, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போவதாக நல்லாட்சி அரச தலைவர்கள் உறுதியளித்திருந்தனர்.
ஆனால், காலப் போக்கில் அந்த உறுதிமொழிகளை அவர்கள் காற்றில் பறக்கவிட்டனர். தம்மை ஆட்சியதிகாரத்தில் இருத்திய நாட்டு மக்களின் மனமறிந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து நல்லாட்சி புரிவதற்கு மாறாக மனம் போனபோக்கில் ஆட்சி செலுத்தியதையே இந்த ஆட்சியாளர்களின் 4 வருட காலத்தில் மக்கள் அனுபவமாகப் பெற்றிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் இராணுவ ஆட்சியிலேயே ஆர்வம் காட்டியிருந்தது. யுத்தத்தின் பின்னர் அரசியல் தீர்வு காண்பதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் அக்கறை காட்டவே இல்லை.
மஹிந்த அரசாங்கத்துக்கு மாற்றீடாக, பல முன்னேற்றகரமான மாற்றங்களைச் செய்யப்போவதாக உறுதியளித்த, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய மும்மூர்த்திகளுக்கும் தமிழ்த் தரப்பு தேர்தலில் ஆதரவளித்தது. இந்த ஆதரவின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கத் தலைவர்கள் முன்னைய அரசாங்கத்தையும்விட தமிழ் மக்களை மோசமாக நடத்துவதிலேயே கவனமாக இருக்கின்றனர்.
அவர்கள் நாட்டை சீரழிப்பதிலேயே வெற்றி கண்டிருக்கின்றனர். எதேச்சதிகாரப் போக்கைக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியிலும் பார்க்க இந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கத்திலும் பார்க்க மோசமானது என்ற அவப்பெயரையே இதுவரையில் சம்பாதித்துள்ளது.
உறுதியற்ற (ஸ்திரமற்ற) அரசியல் நிலைமை, பொருளாதார பாதிப்பு, பொறுப்பு கூறுகின்ற சர்வதேச கடப்பாட்டையும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலைமாறுகால நீதியை வழங்குகின்ற கடமையையும் புறக்கணித்த போக்கு, சிங்கள பௌத்த தேசியவாதத்தின் மேலாண்மைக்கு வழியேற்படுத்தியமை, மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு இடமளித்தமை,
சர்வதேச பயங்கரவாதம் நாட்டுக்குள் பிரவேசித்ததைத் தடுப்பதில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமை, மக்கள் மத்தியில் நல்லுறவு, நல்லிணக்கம், ஐக்கியம், சக வாழ்வு என்பவற்றை ஏற்படுத்தத் தவறியமை போன்ற பல்வேறு குறைபாடுகளையே இந்த அரசாங்கம் சாதனைப் பட்டியலாகக் கொண்டிருக்கின்றது.
கேள்விகள்
இந்த நிலையில் நன்மைகளைப் பெற்றுத் தரும். பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டின் சுபிட்சத்துக்கு வழிகோலும் என்ற நம்பிக்கையில் இந்த அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அதனை சரியான வழியில் கையாள முடியாமல் தடுமாற்றத்துக்கு ஆளாகி இருக்கின்றது.
முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள் ளோம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப் பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவருடைய கூற்று இன்றைய தமிழ் அரசியலின் கடினமான சூழலைப் பிரதிபலித்திருக்கின்றது.
தமிழ் மக்களின் அரசியல் பயணத்திலே பல வித்தியாசமான தசாப்தங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். ஆனால், இன்று நாங்கள் இருக்கின்ற சூழல் இதற்கு முன்னெப்போதும் இல்லாத சூழலாக இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார். யாழ்ப்பாணம் ஆழியவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு உகந்த ஒரு சூழலை நாம் உருவாக்கிவிட்டோம் என்று நினைத்திருந்தபோது, அந்தச் சூழலே எங்களுக்கு மாறானதாகவும், நாங்கள் சறுக்கி விழக்கூடியதாகவும், விழுந்தால் பாரிய காயம் ஏற்படக் கூடியதாகவும் இன்று எங்கள் முன்னால் இருந்து கொண்டிருக்கின்றது.
கஷ்டமான இந்த சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை அடைந்தே தீருவோம் என அவர் கூறியுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரும் இந்த அரசாங்கம் தங்களையும் தமிழ் மக்களையும் ஏமாற்றிவிட்டது என்றே தெரிவித்திருக்கின்றனர்.
அரசாங்கத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை இப்போது ஏமாற்றமாக மாறியிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்ற பொறுப்பில் சரியான வழிமுறையைத் தெரிந்தெடுத்துச் செயற்படத் தவறியிருக்கின்றது என்ற ஒப்புதல் கூற்றாகவும் சுமந்திரனுடைய கூற்றைக் கருத முடியும்.
அதேபோன்று, இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் அரசு மீதான ஏமாற்ற உணர்வையும், தலைவர்கள் என்ற ரீதியில் அவர்கள் தீர்க்கதரிசனமான முடிவுகளை மேற்கொள்ளத் தவறிவிட்டார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றன என்றே கொள்ள வேண்டி இருக்கின்றது.
ஏனெனில் அடுத்த கட்டமாக அவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள், இந்த அரசாங்கத்தையும் பேரின அரசியல் தலைவர்களையும் எவ்வாறு கையாளப் போகின்றார்கள் என்பது தெரியாத ஒரு நிலைமையிலேயே தமிழர் தரப்பு அரசியல் காணப்படுகின்றது.
இந்த கடினமான அரசியல் சூழலில் இருந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்வாறு வென்றெடுக்க முடியும்? எவ்வாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செயற்படப் போகின்றது? – என்ற கேள்விகள் பூதாகரமாக எழுந்து நிற்கின்றன.
பொறுப்புக்கள்
தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்ற பாரிய பொறுப்பை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, வெறுமனே தேர்தல்களை இலக்கு வைத்த கொள்கைகளைக் கொண்டதாகவே இதுவரையில் செயற்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான மூலோபாயத் திட்டங்கள் எதுவும் கூட்டமைப்பின் தலைமையிடம் இல்லை.
அதேபோன்று கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சியிடமும் இல்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது பல கட்சிகள் ஒன்றிணைந்ததோர் அரசி யல் கூட்டு என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறைமை என்ற பொதுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே பங்காளிக் கட்சிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ளன.
ஆனால் கல் தோன்றா, மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடிகளே தமிழர்கள் என்ற மிகவும் பழைமையான பெருமை பேசுவதைப் போன்று தாயகம், பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமை, சுயநிர்ணய உரிமை, சமஷ்டி என்ற பழைய கொள்கைகள் பற்றிப் பேசுவதிலும் அதன் அடிப்படையிலான தீர்வே வேண்டும் என்று பிரசாரம் செய்வதிலுமே, தமிழ்த்தேசிய கூட்டமைப் பின் அரசியல் காலம் கரைந்து கொண்டிருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இத் தேர்தல் காலப் பிரசாரக் கொள்கையை அல்லது இலக்கை அடைவதற்கான ஓர் அரசியல் வழித்தடம் பற்றிய திட்டங்கள் எதுவும் கூட்டமைப்பின் தலைமையிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தகைய வழித்தடத் திட்டத்துக்கான வேலைத் திட்டம் பற்றிய சிந்தனை ஏற்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்குரிய தீர்க்கதரிசனமிக்க பார்வை அவர்களிடம் இருப்பதாகவும் தென்படவில்லை. அத்தகைய பார்வை ஒன்று குறித்த கலந்துரையாடல்களோ விவாதங்களோ யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு தசாப்த காலப் பகுதியில் இடம்பெறவுமில்லை.
ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டதோர் அரசியல் போராட்டத்தைத் தொட ர்ந்து முன்னெடுப்பது என்பது சாதாரண அரசியல் செயற்பாடல்ல. அது மிகவும் பொறுப்பு வாய்ந்தது. மிகுந்த தொலை நோக்குடன், அரசியல் தீர்க்கதரிசனத்துடன் திட்டமிடப்பட வேண்டியது.
அது, வெறுமனே காலத்துக்குக் காலம் தேர்தல்களில் வெற்றி பெற்று பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்கின்ற சாதாரண அரசியல் செயற்பாடல்ல. தேர்தல் வெற்றிகளின் மூலம், பாராளுமன்றத்தில் தமது அரசியல் சக்தியை காட்சிப்படுத்துகின்ற சாதாரண அரசியல் அவர்களுக்கு அவசியமில்லை.
தமிழ் அரசியல் என்பது சாதாரணமானதல்ல. தீர்மானம் மிக்க இரகசியமான தந்திரோபாயங்களைக் கொண்ட பேரினவாத பௌத்த மேலாதிக்கம் கொண்டதோர் இனவாத அரசியல் செயற்பாடுகளுக்கு ஈடுகொடுத்துச் செயற்பட வேண்டிய பாரிய பொறுப்பை அது கொண்டிருக்கின்றது.
ஜனநாயகப் போர்வையில் பெரும்பான்மை என்ற பாரிய பலத்தைக் கொண்டுள்ள இனவாத, மதவாத போக்கையும் சிறுபான்மை இன மக்களை இன ரீதியாகவும், மத ரீதியாகவும் அடக்கி ஒடுக்கி மேலாண்மை கொண்டதோர் ஆட்சியைக் கொண்டு செலுத்துகின்ற பலம் வாய்ந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டிய பொறுப்பை, தமிழ் அரசியல் கொண்டிருக்கின்றது.
இத்தகைய பொறுப்புமிக்க தமிழர் தரப்பு அரசியலைக் கொண்டு நடத்துவது என்பது தனிப்பட்ட ஒரு சிலரின் தீர்மானங்களிலோ அல்லது கட்சி அரசியல் நலன்களை முதன்மைப்படுத்திய அரசியல் செயற்பாடுகளிலோ தங்கியிருக்கவில்லை.
அவ்வாறு தங்கியிருப்பதென்பது தமிழ்த் தரப்பு அரசியலின் பொறுப்புணராத செயற்பாடாகவே அமையும். இத்தகைய ஓர் அரசியல் பின்னணியில் தமிழ்த் தரப்பு அரசியல் எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கின்றது, அது எத்தகைய அரசியல் செல்நெறியில் வழிநடத்தப்படுகின்றது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
வெற்றுப் பிரகடனம்
பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களுடன் இணைந்து, சம அரசியல் உரிமைகளுடன் வாழ்வதற்கான சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மிதவாத தமிழ் அரசியல் தலைவர்கள், தங்களுடைய முயற்சிகள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியதையடுத்தே தனிநாட்டுக் கொள்கையைப் பிரகடனம் செய்திருந்தனர்.
ஆனாலும் அந்தத் தனிநாட்டை அடைவதற்கான அரசியல் ரீதியான வழிமுறைகள் குறித்த எந்தவொரு திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை. அரசியல் உரிமைகளுக்கான சாத்வீகப் போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதற்காக மேற்கொண்ட அரசியல் பிரசாரத்தையே தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பான திட்டத்தின் செயற்பாடாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள்.
சம அரசியல் உரிமைக்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இடம்பெற்ற போதிலும், பேச்சுக்களின்போது எட்டப்பட்ட உடன்பாடுகள் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை. மாறாக அந்த ஒப்பந்தங்களும் உடன்பாடுகளும் கிடப்பில் போடப்பட்டன. அல்லது கிழித்தெறியப்பட்டன.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவின. அது மட்டுமல்ல. சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களும், அவர்களுக்கு ஆதரவாக அணிதிரண்டிருந்த தமிழ் மக்களும் அடித்து நொறுக்கப்பட்டார்கள்.
அரச படைகளின் ஆயுத முனையில் அவர்களை அடக்கி ஒடுக்குகின்ற செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருந்தனர். இதனால் போராட்டங்கள் நசுக்கப்பட்டது ஒரு புறமிருக்க, தமிழ் அரசியல் தலைவர்களினதும் தமிழ் மக்களினதும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்தது.
இத்தகைய ஒரு நிலையிலேயே தனிநாட்டுக்கான கொள்கைப் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் அந்த தனிநாட்டு கொள்கையை நிறைவேற்றுவதற்கான அரசியல் செல்நெறி குறித்த திட்டங்களோ முன் ஆயத்தங்களோ மிதவாத அரசியல் தலைவர்களிடம் இருக்கவில்லை.
ஆனால், அவர்களின் அரசியல் விழிப்பூட்டலுக்கான பிரசாரங்கள், தமிழ் இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சியையும் வேகத்தையும் தூண்டிவிட்டிருந்தன. இந்தத் தூண்டுதலின் அடிப்படையிலேயே ஆயுதப் போராட்டம் முளைவிட்டிருந்தது.
அரசியல் வழிநடத்தல்கள்
தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அனுசரணையையும், ஆதரவையும் பெற்றிருந்த போதிலும், அது பிராந்திய நலன்சார்ந்ததோர் அரசியல் நடவடிக்கையாகவே அமைந்திருந்தது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கும் நலன்களுக்கும் முன்னுரிமை கொண்டதாகவோ அல்லது அதனை முழு அளவில் முதன்மைப்படுத்தியதாகவோ அமைந்திருக்கவில்லை. புறநிலையில் இந்தியாவின் ஆதரவு இருந்தது போன்று அகநிலையில் அரசியல் வழிநடத்தல்களோ அல்லது அரசியல் சாணக்கியம் மிகுந்த உதவிகளோ ஆயுதப் போராளிகளுக்கு இருக்கவில்லை.
மிதவாத அரசியல் தலைவர்களுக்கும், போராளிகளுக்கும் இடையில் இறுக்கமான பிணைப்பு இருக்கவில்லை. மாறாக முரண்பாடான ஓர் அரசியல் நிலைமையே காணப்பட்டது. இந்த முரண்பாட்டின் விளைவாகவே மிதவாத அரசியல் தலைவர்கள் அவலமாக உயிரிழக்க நேர்ந்தது என்றுகூடக் கூறலாம்.
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலம் மட்டுமல்ல. ஆயுதப் போராட்டம் வீறுகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் காலத்திலும்கூட உரிய இராஜதந்திர ரீதியிலான அரசியல் தந்திரோபாய அனுசரணையோ அல்லது அரசியல் வழிமுறைகளுக்கான வழிநடத்தல்களுடன் கூடிய உதவிகளோ கிட்டியிருக்கவில்லை.
அந்தப் போராட்டம் முழுக்க முழுக்க இராணுவ மயமானதாகவே காணப்பட்டது. அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நீண்டகால யுத்த நிறுத்தம் மற்றும் நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தைகளின்போதும் அரசியல் தந்திரோபாயச் செயற்பாடுகள் அருகியே காணப்பட்டன என்பதே அரசியல் அவதானிகளினதும், இராணுவ ஆய்வாளர்களினதும் கருத்தாகும்.
யுத்தம் முடிவடைந்த பின்னர், தமிழ் மக்களின் அரசியல் தலைமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளக ஜனநாயகத்துக்கு அதிக மதிப்பளித்திருக்கவில்லை. வலிமையான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னணியில் சாத்வீக ரீதியில் அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பது என்பது இலகுவான காரியமல்ல.
ஆட்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தை வெற்றிகொண்டு, பயங்கரவாதத்தை இல்லாமல் செய்துவிட்டோம் என்ற வெற்றி மமதையில் உள்ள அரசியல் உளவியல் நிலையில் திட்டமிட்ட வகையில் இராஜதந்திரோபாய ரீதியில் முன்னெடுத்திருக்க வேண்டும்.
அத்தகைய முற்தயாரிப்புடனான போராட்டம் என்பது தனியே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் மட்டுமன்றி, தமிழர் தரப்பின் துறைசார்ந்த பலதரப்பினருடைய பங்களிப்புடனும், வழிநடத்தலுடனும் ஈன்றெடுக்கப்பட்டிருக்க வேண் டும். யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர், அத்தகைய போராட்டம் முன்னெடுக் கப்படவில்லை.
அத்தகைய போராட்டத் துக்கான முன் ஆயத்தங்கள்கூட செய் யப்படவில்லை என்றே கூற வேண் டும். மொத்தத்தில் கட்சி அரசியல் நலன் சார்ந்த நிலையில் கூட திட்டமிட்ட வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வல்ல போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களை முதன்மைப்படுத்தி பிரசார அரசியல் நலன்சார்ந்த போராட்டங்களே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூறு தல், அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு போன்ற எரியும் பிரச்சினைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டன.
அப் போராட்டங்களும்கூட, பாதிக்கப்பட்ட மக்களை முன்னிலைப்படுத்திய தாக இருந்ததேயொழிய பெரிய அளவில் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட் டங்களாக பரிணமிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சி பெற்று வீதிகளில் இறங்கிப் போராடிய போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேட்டுக் குடி அரசியல் போக்கில் ஒதுங்கி நிற்கின்ற ஒரு போக்கைக் கடைப் பிடித்ததே தவிர போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து,
அவர்களுக்கு அவசியமான அரசியல் தலைமையை வழங்கவில்லை. இத் தகைய ஒரு பின்னணியில்தான், தமிழ் அரசியல் ஒரு இக்கட்டான சூழலில், கடினமான சவாலுக்கு முகம் கொடுத்திருக்கின்றது.
இந்தியாவின் தலையீடு ஒரு வாய்ப்புக்கான வழி திறந்திருக்கின்ற ஒரு சமிக்ஞையைக் காட்டியுள்ள இந்தச் சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பரந்த அரசியல் மனப்பான்மையுடன் ஏனைய அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் துறைசார்ந்தவர்களையும் இணைத்துக் கொண்டு வகுத்தொதுக்கப் பட்ட ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் அரசியல் நட வடிக்கைகளை முன்னெ டுக்க வேண்டும்.
அத்தகையதோர் அரசியல் முயற்சியே தமிழ் அரசியலில் இப்போது அவசியம். இது குறித்து தமிழ் அரசியல் தலைவர்களும், அரசியல் தலைமைகளும் சிந்திப் பார்களா? சிந்திக்க முன் வருவார்களா?