ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான ஆதாரங்கள் ; இந்து சம்மேளனத்தின் தலைவர் சாட்சியம்.!
இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி சாட்சியம் வழங்கியுள்ளாா்.
இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போது கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல். ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் பல்வேறு காணொளி ஆதாரங்களை வெளியிட்டுள்ளாா்.
பேட்டியில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினால் கோரப்பட்டதற்கிணங்க, அருண்காந்த் நேற்று திங்கட்கிழமை ஆஜராகி சாட்சியம் வழங்கியுள்ளாா்.
அதன்படி காலை 9 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, காணொளி ஆதாரங்கள் அடங்கிய கையடக்கத் தொலைபேசி மேலதிக விசாரணைகளுக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணைகளின்போது இத்தகைய செயற்பாடுகளில் ஏன் ஈடுபடுகின்றீர்கள்? உங்களுடைய இலக்கு என்ன?" என்ற அதிகாரிகளின் கேள்விக்கு, முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுடனோ அல்லது முஸ்லிம் சமூகத்தினருடனோ எமக்கு எதுவித தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை.
ஆனால் ஹிஸ்புல்லா மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக செயற்பட்டு வந்தமையாலேயே நான் இவ்வாறு அவருக்கெதிராக ஆதா ரங்களைப் பகீரங்கமாக வெளியிட்டேன்" என்று பதிலளித்ததாக அருண்காந்த் தெரிவித்துள்ளாா்.