தெரிவுக்குழுவின் செயற்பாட்டினால் இறுதி தீர்வு கிடையாது - மஹிந்த அமரவீர
தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் மூலம் ஒருபோதும் இறுதி தீர்வினை வழங்க முடியவில்லையெனத் தெரிவித்த, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, குற்றம் செய்தவர்களுக்கு நீதிமன்றத் தால் தண்டனை வழங்கப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின் போதே அவர் இவ்வாறு தெரி வித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காகவே தெரி வுக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால் அது முறையற்ற விதத்தில் செயற் படுகின்றது.
ஊடகச் சந்திப்பைப் போன்று தெரிவுக்குழு விசாரணைகள் இடம்பெறுகின்றன. மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படாது தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் தெரிவுக்குழு உறுப்பி னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள சிலரும் அதிருப்தியிலுள்ளனர். தெரிவுக் குழு நியமனத்திற்கு நாம் கையெழுத்திடவில்லை. ஐக்கிய தேசிய கட்சியினர் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டமை மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமையின் பின்னரே இதன் பாதூர தன்மை பற்றி சிந்தித்தோம்.
எவ்வாறிருப்பினும் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஒரு போதும் இறுதி தீர் வினை வழங்கப்போவதில்லை. ஆனால் குற்றம் செய்தவர்களுக்கு நீதிமன் றத்தால் தண்டனை வழங்கப்படும் என்று உறுதியாகக் கூற முடியும்.
இம்மாத இறுதியில் இலங்கை வரவிருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச் சர் மைக் பம்பியோ இராணுவ விவகாரங்களில் செய்து கொள்ளவிருக்கும் ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு இலங்கையை வலியுறுத்தவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் உள்நாட்டு இராணுவத்தினருக்கு உள்ள கைது செய்தல், வழக்கு தொடர்தல், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல் உள்ளிட்ட பல முக் கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள இந்த ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதால் இதில் எமக்கு உடன்பாடு கிடையாது.
வெளிநாடுகளுடன் முரண்பட வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. வெளி நாட்டு தொடர்புகள் இன்றி எம்மால் அபிவிருத்தியை துரிதப்படுத்தவும் முடி யாது. ஆனால் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள இந்த ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால் இது குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.