மனோ கணேசனிற்கு நன்றிகள் - விக்கினேஸ்வரன்
திருகோணமலை மாவட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார், முல்லைத்தீவு மாவட்ட நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரங்களில் தலையிட்டமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது நண்பரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கனக ஈஸ்வரன் இவ்விவகாரங்கள் தொடர்பில் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட உள்ளதாக எனக்கு தெரிவித்துள்ளார். அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, இந்த வழக்குக்கு சத்திய வாக்குமூலம் தர நீங்கள் தயாராக இருப்பதாகவும், அவர் மூலம் நான் அறிந்தேன்.
இதற்காக மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முன்னாள் வடமாகாண சபை முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணி செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சருமான மனோ கணேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் விவரித்துள் ளாா்.
இதுபற்றி அமைச்சர் மனோ கணேசனிடம் வினவியபோது, விக்னேஸ்வரன் இதுபற்றி தன்னிடம் நேரடியாக உரையாடியதாகவும் மேலும் திருகோணமலை மாவட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார், முல்லைத்தீவு மாவட்ட நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரங்கள் இன்னமும் முழுமையான முடிவுகளை எட்டவில்லை.
தொல்பொருள் திணைக்களத்திடமிருந்து சில ஆவணங்களை தான் கோரி இருப்பதாகவும் அவை இவ்வாரம் தனக்கு கிடைக்கும் என்றும், அதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தான் முன்னெடுக்க உள்ளதாகவும், இக் கோவில்களை மீளக்கட்டுவிக்க தனது அமைச்சு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளாா்.